For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பிஸ்கட்”டிற்காக மோதப் போகும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்.. ஐசிசி, ரசிகர்கள் கிண்டல்

துபாய் : ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் விளம்பரதாரரான "டியூசி" (TUC) பெயரில் கோப்பை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. டியூசி கோப்பை என பெயரிடப்பட்டுள்ள இந்த கோப்பை, பார்க்க பிஸ்கட் வடிவத்தில் இருக்கிறது.

காரணம், விளம்பரதாரர் டியூசி ஒரு பிஸ்கட் பிராண்ட் என்பது தான். எனவே, கோப்பையையும் பிஸ்கட் வடிவத்தில் அமைத்துள்ளனர்.

இந்த கோப்பை, சமூக வலைதளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. ஐசிசி முதற்கொண்டு அனைவரும் இந்த கோப்பையை கிண்டல் செய்து வருகின்றனர்.

பிஸ்கட்டிற்கு புது அர்த்தம்

ஐசிசி தன் ட்வீட்டில், "பிஸ்கட்டை கொடுத்து, வாங்கிக் கொள்வதற்கு புதிய அர்த்தமே கொடுத்து விட்டார்கள்" என கிண்டல் செய்துள்ளது.

பாகிஸ்தான் தான் காரணம்

பாகிஸ்தான் தான் காரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தான் இந்த கோப்பை வடிவத்துக்கு ஒப்புதல் வழங்கியது என தெரிந்ததை அடுத்து பலரும் பாகிஸ்தானை கேலி செய்யவும் தவறவில்லை.

கவலைப்படாதே பாகிஸ்தான்

ஒரு ட்வீட்டோடு நிற்காத ஐசிசி மற்றொரு ட்வீட்டில், "நீங்கள் vs ட்ரோபி.. ட்ரோபி உங்களை பார்த்து கவலைப்படாதே என கூறுகிறது" என பாகிஸ்தானை கேலி செய்துள்ளது.

இப்படி விளம்பரம் செய்யலாமா?

இப்படி விளம்பரம் செய்யலாமா?

விளம்பரம் முக்கியம்தான். அதற்காக, இப்படி முக்கியமான கோப்பை வடிவத்தில் கூடவா விளம்பரம் செய்வார்கள் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. என்னவோ, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கே வெளிச்சம். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதிய டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என வெற்றி பெற்றது. அடுத்து டி20 தொடரில் இரண்டு நாடுகளும் மோத உள்ளன.

Story first published: Wednesday, October 24, 2018, 21:16 [IST]
Other articles published on Oct 24, 2018
English summary
Pakistan vs Australia T20 series trophy look like biscuit and world is trolling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X