Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து எடுத்த பெரிய ரிஸ்க்.. கிளைமாக்சை நெருங்கிய பாக். டெஸ்ட்.. 2வது இன்னிங்சிலும் ரன் வேட்டை

ராவல்பிண்டி : இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பல திருப்பங்களுடன் கிளைமாக்சை நெருங்கி வருகிறது.

17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

எனினும், இங்கிலாந்து அணி முதல் நாளில் மட்டும் 506 ரன்களை குவித்தால், இந்த டெஸ்ட் மீது அனைவரின் கண்களும் திரும்பியது. அதுமட்டுமல்லாமல், ஆடுகளம் குறித்து விமர்சனங்களும் குவிந்தது.

 முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து அணியில் 4 வீரர்கள் சதம் விளாச , முதல் இன்னிங்சில் 657 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் விளையாடியது.தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் ஆகியோர் சதம் விளாச, பாபர் அசாமும், 136 ரன்களை குவித்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 579 ரனகள் குவித்தது.

 264 ரன்கள்

264 ரன்கள்

78 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சில் விளையாடியது. இதிலும், இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். ஷாக் கிராலி, ஜோ ரூட், ஹஹாரி புருக் ஆகியோர் அரைசதம் கடந்தனர் . இதன் மூலம் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

வெற்றி இலக்கு

வெற்றி இலக்கு

இதனையடுத்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அப்துல்லா ஷபிக், 6 ரன்களிலும், அசார் அலி ரன் எடுக்காத நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். கேப்டன் பாபர் அசாம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பரபரப்பான கட்டம்

பரபரப்பான கட்டம்

இதனையடுத்து 4வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 80 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. தற்போது கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 263 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் இன்னும் 8 விக்கெட் உள்ளன. இதனால் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால், ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Sunday, December 4, 2022, 18:40 [IST]
Other articles published on Dec 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+