Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. பாகிஸ்தான் vs இங்கிலாந்து பலம் என்ன?.. யாருக்கு வெற்றி வாய்ப்பு!

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்பார்க்காத பல்வேறு திருப்புமுனைகளுடன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

அரையிறுதிப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, நியூசிலாந்து அணிகள் வெளியேறியதால், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் கோப்பைக்காக மோதவுள்ளன.

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு பிரமாண்ட முறையில் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் அணி கடைசியாக 2009ம் ஆண்டு கோப்பையை வென்றது. இதே போல இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்ததற்கு இன்று முடிவு வரவுள்ளது.

பாகிஸ்தானின் பலம்

பாகிஸ்தானின் பலம்

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததே இன்று வரை ஆச்சரியமாக உள்ளது. லீக் சுற்றுடன் வெளியேறவிருந்த அந்த அணி, தென்னாப்பிரிக்க அணியின் ஒரே ஒரு தோல்வியால் அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்பின்னர் கடைசியாக ஆடிய 4 போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து பெரும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

இங்கிலாந்தின் ஏக்கம்

இங்கிலாந்தின் ஏக்கம்

மற்றொருபுறம் இங்கிலாந்து அணி இந்திய அணியை மிகவும் மோசமாக பந்தாடிவிட்டு இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. லீக் சுற்றுகளில் சற்று பலவீனமாக தெரிந்த அந்த அணி, மிகவும் பலமான இந்தியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதனால் இன்றைய போட்டியின் மீது ஏகபோகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பார்ப்பது எப்படி?

பார்ப்பது எப்படி?

இரு அணிகளும் மோதும் போட்டியை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் நேரலையை பார்க்க விரும்பும் ரசிகர்கள், மதியம் 1.30 மணிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

Story first published: Sunday, November 13, 2022, 9:53 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+