Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?.. இன்று பாகிஸ்தான் vs நியூசிலாந்து பலப்பரீட்சை.. எங்கு? எப்படி பார்ப்பது?

சிட்னி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த அக்டோபர் 16ம் தேதியன்று தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அதன்படி முதல் அரையிறுதிப்போட்டி இன்று சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லீக் சுற்றில் நியூசிலாந்து அணி எந்தவித சிக்கலும் இன்றி வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் பாகிஸ்தான் அணியோ பல்வேறு அடிகளை வாங்கி கடைசி நேரத்தில் அதிர்ஷ்டத்தால் உள்ளே வந்துள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி மட்டும் நெதர்லாந்து அணியுடன் தோல்வியடையாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் எப்போதோ வெளியேறியிருக்கும்.

Pakistan vs New Zealand clash today in semi final match of t20 world cup, when and where to watch ?

அதிர்ஷ்டத்தால் உள்ளே வந்தாலும் பாகிஸ்தானின் பலம் ஆச்சரியம் தருகிறது. கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் அபார வெற்றி கண்டுள்ளதால் பெரும் புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. அந்த அணியில் பிரச்சினையாக இருந்த மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் மீண்டும் கம்பேக் தந்துள்ளனர்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வரவேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இரு அணிகளும் மோதும் இந்த போட்டியை வழக்கம் போல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையாக பார்க்கலாம். இதே போல ஆன்லைனில் பார்க்க விரும்புவோர், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, November 9, 2022, 9:57 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+