இந்தியாவிடம் பெற்ற தோல்வி பாதிப்பிலிருந்து பவுன்ஸ் ஆகுமா பாகிஸ்தான்? மே.இ.தீவுகளுடன் நாளை மோதல்
கிறைஸ்ட்சர்ச்: தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் கடந்த 15ம்தேதி நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. அதேபோல 16ம்தேதி நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசாக அளித்தது.
இந்நிலையில் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் வெற்றிக்காக வரிந்துகட்டும் என்பதால் போட்டியில் அனல் பறக்கும்.

மோசமான பவுலிங்
இவ்விரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தின. இருப்பினும் ஒப்பீட்டளவில் பாகிஸ்தானின் பந்து வீச்சு பலமானதாகவே உள்ளது. சொகைல் கான், முகமது இர்பான் போனஅற பந்து வீச்சாளர்கள் மே.இ.தீவுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

பாகிஸ்தானில் குழப்பமோ குழப்பம்
பாகிஸ்தானின் பேட்டிங்தான் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. ஓப்பனிங்கில் யாரை இறக்குவது, விக்கெட் கீப்பர் யார் என்பது போன்ற பல கேள்விகள் இப்போதும் எழுப்பப்பட்டு வருகின்றது. அநேகமாக வழக்கமான விக்கெட் கீப்பர் சர்பாஸ் அகமது, உமர் அக்மலுக்கு பதிலாக கிளவுசை மாட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணி விவரம்:
நசீர் ஜாம்ஷெட், அகமது ஷெசாத், யூனிஸ் கான், மிஸ்பா-உல்-ஹக் (கேப்டன்), ஹரிஷ் சொகைல், உமர் அக்மல், ஷாகிப் மக்சூட், சர்ப்ராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), ஷாகித் அப்ரிடி, ரகத் அலி, முகமது இர்பான், சொகைல் கான், வகாப் ரியாஸ், ஈசன் அடில், யாசிர் ஷா.

மே.இ.தீவுகள் அணி விவரம்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), மார்லன் சாமுவேல்ஸ், தினேஷ் ராம்டின் (விக்கெட் கீப்பர்), கேமர் ரோச், ஆன்ட்ரே ரசல், டேரன் சமி, லென்ட்ல் சிமன்ஸ், ட்வைன் ஸ்மித், ஜெரோம் டைலர், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜொனாதன் கார்டர், ஷெல்டன் கோட்ரெல், கிறிஸ் கெய்ல், நிகிதா மில்லர்.


Click it and Unblock the Notifications