ஆசிய கோப்பை முன் பாகிஸ்தானுக்கு கவுரவம்.. உலகின் நம்பர் 1 அணியாக மாறியது.. ஆப்கானுக்கு ஒயிட்வாஷ்
கொழும்பு : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் பக்கர் சமான் 27 ரன்களும், இமாம் உல் ஹக் 13 ரன்களும் எடுத்தனர். இதனை எடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபர் அசாம்,முகமது ரிஸ்வான் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஆட்டம் இழந்தனர். 38 ரன்களும், முகமது நவாஸ் 30 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் , 5 ரன்களிலும் இப்ராஹிம் சாட்ரான் டக் அவுட் ஆகியும் கேப்டன் ஹஸ்மதுல்லா 13 ரன்களிலும், முகமது நபி மூன்று ரன்ளிலும் குலாப்தீன் டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.
ரியாஸ் ஹசன் மற்றும் ஷஹிதுல்லா முறையே 34 மற்றும் 37 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினர்.இதனால் ஆப்கானிஸ்தான அணி 97 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த முஜிபுர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
எனினும் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து முஜிபுர் ரஹ்மான் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார்.இதில் ஐந்து பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் ஆப்கானிஸ்தான அணி 48.4 ஓவரில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளுமே இழந்தது. இதன் மூலம் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான அணி கடந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணியை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியது.
இதேபோன்று நடப்பாண்டில் நியூசிலாந்திடம் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கிலும் பிறகு 4க்கு ஒன்று என்ற கணக்கிலும் பாகிஸ்தான அணி வென்றது. இதன் மூலம் 115.8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான அணி தற்போது ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்ததுடன் 118.48 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதலிடம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications