நீங்க வேணா பாருங்க..!! பாகிஸ்தானுக்கு அரையிறுதியில் நிச்சயம் இடமிருக்கு…!!
லண்டன்: உலக கோப்பையின் அரையிறுதிக்கு 3 அணிகளுடன் பாகிஸ்தானும் முன்னேறும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி கண்டன.
1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே,இந்த உலக கோப்பைபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுவானவை
இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன.ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாகவே உள்ளன.

ஆஸி.எழுச்சி
ஸ்மித் மற்றும் வார்னர் வருகையால் ஆஸ்திரேலிய அணி எழுச்சி பெற்றுள்ளது. நியூசிலாந்தும் அபாரமாக ஆடிவருகிறது. வில்லியம்சன், டெய்லர் ஆகியோர் கலக்கலான பார்மில் இருக்கின்றனர். நீஷம், கிராண்ட்ஹோம், சான்ட்ர் ஆகிய ஆல்ரவுண்டர்களும் அபாரமாக ஆடுகின்றனர்.

வலிமையான தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்க அணியில் ரபாடா, இங்கிடி, ஸ்டெய்ன் என வேகப்பந்து வீச்சு வலிமையாக இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்டாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன.

பவுலிங்கில் அசத்தல்
மேற்கிந்திய தீவுகள் அணியும் வலுவாக இருக்கிறது. அந்த அணியில், பேட்டிங்கில் 8ம் வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். கெய்ல், ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, பூரான் என நல்ல பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பவுலிங்கில் தாமஸ் அசத்துகிறார்.

7 விக். வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள். அதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்ஆப்ரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக இருக்கின்றன.

அரையிறுதியில் பாக்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும். எஞ்சிய ஒரு இடம் மேற்கிந்திய தீவுகளுக்கு என கும்ப்ளே கூறியிருந்தார். அதே கருத்தைத்தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும் தெரிவித்திருந்தார்.

வாய்ப்புகள் அதிகம்
ஆனால் 4வது அணியாக பாகிஸ்தான் அணிதான் முன்னேறும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேற்கிந்திய தீவுகளின் ஆட்டத்தை பார்க்கும் போது, அந்த அணிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications