Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவில் பார்வையற்றோர் ஆசியக் கோப்பை போட்டி: பாகிஸ்தான் விலகல்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்குபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்

கேரள மாநிலம் கொச்சியில் அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் 24 வரை பார்வையற்றோர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியது. இதனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்துவதுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அக்கட்சித் தொண்டர்கள் மும்பை பிசிசிஐ அலுவலகத்தையும், அதன் தலைவர் சஷாங் மனோகரையும் முற்றுகையிட்டு சிவசேனா கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இதே சம்பவத்தைக் காரணம் கூறி பார்வையற்றோர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத் தலைவர் சுல்தான் ஷா கூறுகையில், தற்போது இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Story first published: Wednesday, October 21, 2015, 22:59 [IST]
Other articles published on Oct 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+