Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

365 நாட்களுக்கு பின்.. டெஸ்டில் முதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான்.. சொந்த மண்ணில் வீழ்ந்த இலங்கை!

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

அண்மை காலமாக பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியடை சந்தித்தது. இதனால் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியை வெற்றிபெற்று கிட்டத்தட்ட ஓராண்டுகள் கடந்தது. இந்த நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

Pakistan won by 4 Wickets against Srilanka and this is their first test win after one year

இந்த நிலையில் ஜூலை 16ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதல் இன்னிங்ஸில் தனஞ்செயா டி சில்வாவின் அபார சதத்தால் இலங்கை அணி 312 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

பின்னர் சாவுட் சக்கீலின் அபாரமான இரட்டை சதத்தால் பாகிஸ்தான் அணி 461 ரன்களை குவித்தது. இதனால் பாகிஸ்தான் அணி 149 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி மதுஷா மற்றும் தனஞ்செயலா டி சில்வாரின் அபாரமான அரைசதம் காரணமாக 279 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 130 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இருப்பினும் 5வது நாள் ஆட்டம் இருந்ததால் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 5வது நாள் ஆட்டத்தை இமாம் உல் ஹக் - பாபர் அசாம் இணை தொடங்கியது. பவுண்டரிகளாக விளாசி ரன்கள் சேர்த்த கேப்டன் பாபர் அசாம் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் ஆட்டம் பரபரப்பானது. ஆனால் பின்னர் களமிறங்கிய சாவுத் சக்கீல் - இமாம் இல் ஹக் கூட்டணி பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அருகில் கூட்டி சென்றது. ஆனால் சக்கீல் 30 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சர்ஃபராஸ் அஹ்மத் 1 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஆகா சல்மான் முதல் பந்திலேயே சிக்சர் விளாசி பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். இறுதிவரை ஆடிய இமாம் உல் ஹக் அரைசதம் விளாசி களத்தில் இருந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

கடைசியாக பாகிஸ்தான் அணி 2022ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. தற்போது அதே ஜூலை 20ஆம் தேதி 2023ஆம் ஆண்டு ஓராண்டு இடைவெளிக்கு பின் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Thursday, July 20, 2023, 13:14 [IST]
Other articles published on Jul 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+