PAK VS BAN: கை நழுவிய அரையிறுதி.. அசத்திய ஷாகின்.. ஆனாலும் ஆறுதல் வெற்றி பெற்ற பாக்.
லார்ட்ஸ்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அதிக ரன்ரேட்டில் வெல்ல முடியாமல் போனாலும், அந்த அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி இருக்கிறது.
உலக கோப்பை தொடரின் 43வது லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டுமென்றால் வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் மட்டுமே எடுத்தது.

செமிபைனல்
இதையடுத்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் வங்க தேசத்தை 7 ரன்களில் சுருட்ட வேண்டும் என்ற அசாத்திய இலக்கு முன் வைக்கப் பட்டது. ஆனால், வங்கதேசமோ, களமிறங்கிய 2வது ஓவரிலேயே 7 ரன்களை கடந்ததால் பாகிஸ்தான் அரையிறுதிக்கான வாய்ப்பு அபோது முடிவுக்கு வந்துவிட்டது.

ஆறுதல் வெற்றிக்கு முயற்சி
அரையிறுதி வாய்ப்பு தான் இல்லை என்றாகிவிட்டது, ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்று கணக்கில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப் படுத்தினர். வங்கதேச தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் 8 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 22 ரன்னிலும் வெளியேறினர்.

போராட்டம்
வழக்கம் போல் ஷாகிப் உல் ஹசன் மட்டும் ஒற்றை நபராக வெற்றிக்காக போராடினார். ஹசன் பொறுப்புடன் விளையாடினாலும் மற்ற வீரர்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வங்கதேசம் ஆல் அவுட்
இறுதியில் வங்கதேசம் 44. 1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

சோயிப் மாலிக் ஓய்வு
பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய இளம் வீரர் ஷாகின் அப்ரிடி 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியுடன் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துகள் தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications