Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முத்தரப்பு டி20 தொடர் - பாகிஸ்தான் அணி சாம்பியன்.. பதிலடி கொடுத்த பேட்ஸ்மேன்.. வில்லியம்சன் அபாரம்

கிறிஸ்ட்சர்ச் : முத்தரப்பு டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் வென்று அசத்தி இருக்கிறது. டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு பாகிஸ்தான் அணி வென்றுள்ள இந்த கோப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார். தொடக்க வீரராக பாகிஸ்தான் அணியில் ஃபின் ஆலன், கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

வில்லியம்சன் அபாரம்

வில்லியம்சன் அபாரம்

ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகளை விளாசி 6 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கான்வே 14 ரன்கள் எடுத்த நிலையில், ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து வில்லியம்சன், பிலிஃப் ஜோடி அணியை சரிவிலிருந்த மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. நியுசிலாந்து அணி பவர்பிளே முடிவில் 51 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

164 ரன்கள் இலக்கு

164 ரன்கள் இலக்கு

பிலப்ஸ் 22 பந்தில் 29 ரன்கள் சேர்கக, சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 38 பந்தில் 59 ரன்கள் சேர்த்து , தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி தந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். மார்க் சாப்மேன் 25 ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 17 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வீரர்கள் நஷிம் ஷா, ஹரிஸ் ரவுப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் தடுமாற்றம்

பாகிஸ்தான் தடுமாற்றம்

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாப்ர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் பொறுமையாக விளையாடினர். பாபர் அசாம் 14 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் தான் எடுத்தது. ஷான் மசூத் 19 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 34 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி தடுமாறியது.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

ஆட்டத்தின் 15வது ஓவரில் சோதி வீசிய ஓவரில் பாகிஸ்தான் வீரர்கள் 25 ரன்களை விளாசினர். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஹைதர் அலி 15 பந்தில் 31 ரன்கள் விளாசினார்.இறுதியில் முகமது நவாஸ், 38 ரன்களும், இஃபிதகார் அகமது 25 ரன்களும் விளாச பாகிஸ்தான் அணி 3 பந்தகள் எஞ்சிய நிலையில், 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Friday, October 14, 2022, 11:45 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+