For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கான் , சென்னை காம்போ.. 3 மாதம் முன்பே பயந்த பாகிஸ்தான்.. வறுத்து எடுக்கும் ரசிகர்கள்

சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து பாகிஸ்தான் என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி தற்போது புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி 6ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி பயந்த மாதிரியே ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருப்பது தற்போது அந்நாட்டு ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Pakistan worst case scenario of fearing losing against afghanistan becames true

உலகக்கோப்பை அட்டவணை தயாரிக்கப்படும் போதே பாகிஸ்தான அணி ஒரு பிரச்சனையை கிளப்பியது. அதாவது சென்னை மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள மாட்டோம் என்பதுதான் இதற்கு அவர்கள் கூறிய காரணம் அணிக்கு சுழற் பந்து வீச்சு என்றால் பலம். இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் எங்களை ஆட விட்டு தோற்கடிக்க பிசிசிஐ திட்டம் போடுகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.

இதனால் நாங்கள் ஆஸ்திரேலியாவை சென்னையிலும் பெங்களூருவில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்ளும் வகையில் அட்டவணையை மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பாகிஸ்தானிலேயே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு பிரச்சினை இருந்தால் மட்டுமே போட்டியை மாற்றுவோம் என்றும் உங்களுடைய சுய லாபத்திற்காக அட்டவணையில் மாற்றம் செய்ய முடியாது என ஐசிசி கை விரித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பயந்தபடியே ஆப்கானிஸ்தானிடம் சென்னையில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். உலகக் கோப்பை பெற்றவுடன் தொடங்குவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை பார்த்து பயந்தால் எப்படி உங்களால் வெற்றி பெற முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் போதே மனதளவில் பாகிஸ்தான் தோற்று விட்டதாகவும், இதனால்தான் இன்றைய ஆட்டத்தில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Tuesday, October 24, 2023, 0:08 [IST]
Other articles published on Oct 24, 2023
English summary
Pakistan worst case scenario of fearing losing against afghanistan becames true ஆப்கான் , சென்னை காம்போ.. 3 மாதம் முன்பே பயந்த பாகிஸ்தான்.. வறுத்து எடுக்கும் ரசிகர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+