நியூசிலாந்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 7வது மாடியிலிருந்து தப்பியோடிய பாக். கிரிக்கெட் வீரர்கள்
இந்த நிலையில் நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 ரிக்டர் அளவுகோலில் இது பதிவாகி இருந்ததால் அந்த நகர் பாதிப்புள்ளானது.
இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக நியூசிலாந்து பிரதமர் அறிவித்தார். நில நடுக்கம் ஏற்பட்டபோது, நீல்சன் நகரில் தங்கி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பீதி அடைந்தனர். ஹோட்டலில் தங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். 7வது மாடியில் தங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதேபோல அங்கு விளையாடி வரும் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியும் பாதுகாப்பாக உள்ளது. இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி பாதிக்கப்படாது என்றும் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications