Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல இருக்கணுமா? வேண்டாமா? ஆல்ரவுண்டருக்கு திடீர் ஆர்டர்.. விருப்பமே இன்றி பயிற்சி.. ஷாக்கிங்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும்.

 இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதற்காக இந்திய அணியில் 3 ஸ்பீட் பவுலர்கள் களமிறக்கப்பட உள்ளனர். 2 ஸ்பின் பவுலர்கள் மட்டுமே ஆட வைக்கப்பட உள்ளனர்.

ஸ்பீட்

ஸ்பீட்

இதில் பும்ரா, அக்சர், அஸ்வின் ஆடுவது உறுதியாகிவிட்டது. இஷாந்த் சிராஜ் இடையே இரண்டாவது ஸ்பீட் பவுலருக்கான போட்டி நிலவி வருகிறது. மூன்றாவது ஸ்பீட் பவுலராக ஆல் ரவுண்டர் வீரரை களமிறக்க இந்திய அணி விரும்புகிறது.இதற்காக பாண்டியாவை இந்திய அணி அணுகி உள்ளது.

பாண்டியா

பாண்டியா

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக அறிமுகம் ஆனார். ஆனால் கடந்த வருடம் இவரின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன்பின் பவுலிங் செய்யவில்லை. கடந்த இரண்டு வருடத்தில் இவர் மொத்தமாகவே 8-10 ஓவர்கள் மட்டுமே வீசி இருப்பார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இவரை மீண்டும் பவுலிங் செய்ய வைக்க பயிற்சியாளர் குழு விரும்புகிறது . இதற்காக அவருக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் பவுலிங் செய்வதில் இவருக்கு வருத்தம் இல்லை. ஆனால் இவரை டெஸ்ட் போட்டிகளில் பவுலிங் செய்ய வைக்கவும் இந்திய அணி நினைக்கிறது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பவுலிங் செய்ய இவருக்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். நீண்ட நேரம் ஓவர் போட முடியாது என்று ஹர்திக் பாண்டியா நினைக்கிறார். அதிலும் பிங்க் பால் போட்டிகளில் ஓவர் வீச முடியாது என்று இவர் நினைக்கிறார். இருந்தாலும் இந்திய அணியின் அழுத்தத்தால் தற்போது பிங்க் பாலை வைத்து பவுலிங் பயிற்சி செய்து வருகிறார்.

 முடியாது

முடியாது

ஆனால் இவர் ஓவர் போட முடியாது என்று அணியில் இருந்து நீக்கிவிடலாம் என்று இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது. இவரையே ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக வைத்து இருக்க முடியாது. ஆல் ரவுண்டராக ஆடினால் ஆடட்டும், இல்லையென்றால் அணியில் இருந்து செல்லட்டும் என்று இந்திய அணி நினைக்கிறது.

Story first published: Saturday, February 20, 2021, 10:44 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+