Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட்டை வித்தியாசமாக கொண்டாடிய பாண்டியா... இது என்ன பாஸ் புது தினுசா இருக்கு?

கட்டாக்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள 'பாரப்பட்டி' மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

ஒவ்வொரு விக்கெட் விழும் போதும் இந்திய வீரர்கள் மிகவும் வித்தியாசமாக அதை கொண்டாடினார்கள். இந்திய அணியில் பாண்டியாவின் வருகைக்கு பின் வித்தியாசமான கொண்டாட்டங்கள் சில நடக்கிறது.

ஏற்கனவே இந்திய அணியில் தவான் கேட்ச் பிடிக்கும் போது தொடையில் தட்டி மீசையை முறுக்குவார். அதேபோல் சாஹல் 'பாங்கரா' நடனத்தில் வருவது போல காமெடியாக நிற்பார். தற்போது இதில் பாண்டியாவும் சேர்ந்து இருக்கிறார்.

சிறந்த வெற்றி

சிறந்த வெற்றி

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இறங்கிய இலங்கை 87 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. டி-20 போட்டியில் இதுதான் இந்தியாவின் சிறந்த வெற்றியாகும். மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இதில் வென்று இருக்கிறது.

சாஹலின் சாதனை

சாஹலின் சாதனை

இந்த போட்டியில் சாஹல் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் போட்ட சாஹல் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். இவரது சுழலில் இலங்கை அணி மொத்தமாக அடங்கியது. இந்த சிறந்த பந்து வீச்சால் நேற்று இவருக்கு மென் ஆப் தி மேட்ச் பட்டம் வழங்கப்பட்டது.

ஆல் ரவுண்டர் பாண்டியா

ஆல் ரவுண்டர் பாண்டியா

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வெற்றிடத்தை பாண்டியா கண்டிப்பாக நிரப்பி இருக்கிறார். நேற்றைய போட்டியில் பேட்டிங் கிடைக்காமல் இருந்த பாண்டியா அதை பவுலிங் மூலம் சமன் செய்தார். சாஹலுக்கு ஈடு கொடுத்து பந்து வீசிய பாண்டியா 4 ஓவரில் 29 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

கொண்டாட்டம்

இதில் பாண்டியா விக்கெட் எடுத்துவிட்டு ஷ்ரேயஸ் ஐயருடன் அதை கொண்டாடினார். அப்போது கைகளால் 'ஹை-பை' சொல்வது போலவே இவர்கள் கால்களால் சொல்லி உள்ளனர். அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்திய அணி ''கைகளில் 'ஹை-பை' சொல்லி பார்த்து இருக்கிறோம். கால்களால் சொல்லும் 'ஹை-பை' க்கு என்ன பெயர் வைப்பது'' என்று கேட்டு உள்ளனர்.

Story first published: Thursday, December 21, 2017, 17:47 [IST]
Other articles published on Dec 21, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+