நடராஜனை கொண்டாடும் பாண்டியா..பார்த்து கத்துக்குங்க..பாக். கிரிக்கெட் அணிக்குள் உருவான புதிய புயல்!
இஸ்லாமாபாத்: இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா சக வீரர் நடராஜனுக்கு தொடர் நாயகன் விருதை வழங்கியதை பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பாராட்டி உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய நடராஜனிடம் ஹர்திக் பாண்டியா தனது ஆட்டநாயகன் கோப்பையை கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த தொடரில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் இந்த விருதை ஹர்திக் பாண்டியா தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தார். அவர்தான் விருதுக்கு தகுதியானவர் என்று கூறி நடராஜனுக்கு பாண்டியா கோப்பையை கொடுத்தார். அதேபோல் கேப்டன் கோலியும் டி 20 தொடருக்கான டெட்டால் கோப்பையை நடராஜனிடம் கொடுத்தார். இவர்கள் இருவரின் செயல் பெரிய பாராட்டுகளை பெற்றது.

எப்படி
இந்த நிலையில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா சக வீரர் நடராஜனுக்கு தொடர் நாயகன் விருதை வழங்கியதை பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பாராட்டி உள்ளார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் வீரர்களை விமர்சனம் செய்துள்ளார்.

என்ன சொன்னார்
இந்திய வீரர் பாண்டியா தொடர் நாயகன் விருது பெற்று அந்த விருதை இளம் வீரர் நடராஜனுக்கு அளித்துள்ளார். விருதை வென்றது மட்டுமின்றி, மக்களின் மனதையம் ஹர்திக் பாண்டியா வென்றுள்ளார். இந்த புகைப்படம் பார்க்கவே அழகாக உள்ளது.

எப்படி
இளைஞர்களை இப்படித்தான் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு இப்படித்தான் வாய்ப்பு அளித்து முன்னேற்ற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் அப்படி நடப்பது உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் சிலர் தங்களைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள்.

இளைஞர்
இளைஞர்களை பற்றி பாகிஸ்தான் வீரர்கள் யோசிப்பதே இல்லை என்று கூறியுள்ளார். இவர் மட்டுமின்றி பாக் ரசிகர்கள் பலர் இதே விஷயத்தை குறிப்பிட்டுள்ளனர். நடராஜன் போல புதிய திறமைகளை இந்தியா மதிக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இளைஞர்கள் வாய்ப்பு பெறுவது கடினமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.


Click it and Unblock the Notifications