இன்னும் 7 போட்டிகள்தான்.. அதன்பின் அணியில் இடமில்லை.. இளம் வீரருக்கு விதிக்கப்பட்ட கெடு.. சாட்டையடி
சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை அடுத்த 7 போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து சோதனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆட கூடிய வீரரை இன்னும் தேர்வு செய்ய முடியாமல் பிசிசிஐ கஷ்டப்பட்டு வருகிறது. தோனி ஆடி வந்த 5வது பேட்ஸ்மேன் இடத்தில் ஆட போகும் வீரர் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் பிசிசிஐ திணறி வருகிறது.
தோனியின் இடத்தை இந்திய அணியின் இளம் வீரர் பண்ட் நிரப்புவார் என்றுதான் இத்தனை நாட்கள் கருதப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் அவர் தனக்கு கொடுத்த வாய்ப்புகளை எல்லாம் மோசமாக ஆடி சொதப்பிவிட்டார். ஒருநாள் போட்டிகளில் இவருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் பண்ட் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. டி 20 போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்தனர்.

வாய்ப்பு பயன்படுத்தவில்லை
தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் மிக மோசமாக ஆடி பண்ட் சொதப்பிவிட்டார். டி 20 அணியில் இதனால் இவரை இனி எடுக்க கூடாது என்ற முடிவில் உள்ளனர். ஒருநாள் அணியிலும் கே. எல் ராகுலை நிரந்தர கேப்டனாக கொண்டு வர முடிவு செய்துவிட்டனர்.

வாய்ப்பு
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் தற்போது பண்டிற்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 7 போட்டிகளில் மட்டும் பண்டிற்கு வாய்ப்பு கொடுத்து அவரை சோதனை செய்து பார்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

மோசம்
அந்த 7 போட்டிகளில் மோசமாக ஆடினால் மொத்தமாக அவரை தூக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மீதம் இருக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளில் பண்ட் மோசமாக சொதப்பினால் அவருக்கு இந்த 7 போட்டிகளுக்கான வாய்ப்பும் கூட வழங்கப்படாது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications