Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க வெறும் டூரிஸ்ட்தான்..தோனி அளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட வீரருக்கு இந்த கதியா? ஷாக் தந்த பிசிசிஐ

சிட்னி: இந்திய அணியில் அடுத்த தோனி என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட இளம் வீரர் ரிஷாப் பண்ட் மொத்தமாக அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டிக்கு தயார் ஆகும் வகையில் இன்று இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கும் இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

அடுத்த வாரம் 17ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணி

இதில் டெஸ்ட் அணியில் மட்டும் இந்தியாவிற்காக தேர்வாகி இருந்தார் கீப்பர் ரிஷாப் பண்ட். அதிக உடலை எடை காரணமாக இவர் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. டெஸ்ட் போட்டியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதிக உடல் எடை காரணமாக இவர் கஷ்டப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் இதற்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

பயிற்சி

பயிற்சி

இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே இவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதுவும் கோலி, புஜாரா போன்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதால் இன்று பண்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி இவர் டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

டெஸ்ட்

டெஸ்ட்

முக்கியமான வீரர்களுக்கு இன்று ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதால் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டு பயிற்சி ஆட்டத்திற்கான அணியில் இவரை சேர்க்க வேறு காரணம் எதுவும் இல்லை. இவர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஆட வாய்ப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இவரை ஓரம்கட்டும் எண்ணத்தில் பிசிசிஐ உள்ளது.

 பயணி

பயணி

இப்போது வரை ஒரு டூரிஸ்டை போல்தான் ரிஷாப் பண்ட் ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார். இந்திய அணிக்காக இவர் பெரிய அளவில் இதுவரை பங்களிப்பு எதுவும் செய்யவில்லை. ஒரு காலத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வீரர் இப்படி திணறுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Story first published: Friday, December 11, 2020, 16:51 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+