Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேசினால் மட்டும் போதுமா.. பண்ட் செய்த காரியம்.. கோபத்தில் சக வீரர்கள்..அஸ்வின் ரியாக்சன்தான் கெத்து

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ரிஷாப் பண்ட் முக்கியமான கேட்ச் ஒன்றை விட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் வார்னர் வெறும் 5 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் வில் புக்கோவஸ்கி, மார்னஸ் இருவரும் நிதானமாக ஆடி வருகிறார்கள்.

மாஸ்

மாஸ்

அதிலும் வில் புக்கோவஸ்கி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். இதுதான் அவருக்கு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. தலையில் காயம் அடைந்து ஓய்விற்கு பின் வில் புக்கோவஸ்கி இன்று களமிறங்கினார். ஆனால் வில் புக்கோவஸ்கி முதல் போட்டியில் ஆடுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

சிறப்பாக

சிறப்பாக

முதல் போட்டியிலேயே மிகவும் சிறப்பான ஷாட்களை தேர்வு செய்து வில் புக்கோவஸ்கி ஆடி வருகிறார். இந்த நிலையில் அஸ்வின் வீசிய 24 ஓவரில் வில் புக்கோவஸ்கி எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்தார். இதை பண்ட் நினைத்து இருந்தால் பிடித்து இருக்கலாம்.

இல்லை

இல்லை

ஆனால் பண்ட் அந்த கேட்சை தவறவிட்டார். வில் புக்கோவஸ்கி மிகவும் வலிமையான வீரர். அவர் கொடுத்த கேட்சை பண்ட் விட்டது பெரிய சர்ச்சையானது. இதனால் அருகில் ஸ்லிப் நின்று கொண்டு இருந்த வீரர்கள் பண்ட் மீது கடுமையாக கோபம் அடைந்தனர். ஆனால் பண்ட் மீது அஸ்வின் கோபம் அடையவில்லை.

 கீப்பிங்

கீப்பிங்

அந்த ஓவருக்கு பின் பண்டின் முதுகில் அஸ்வின் நட்பாக தட்டிக்கொடுத்தார். அதே சமயம் கீப்பிங்கில் நின்று கொண்டு பண்ட் தொடர்ந்து ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் சரியாக கேட்ச் பிடிப்பது இல்லை என்று அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, January 7, 2021, 11:43 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+