இவரை எல்லாம் அணியில் எடுத்ததற்கு.. வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க.. களத்தில் அதிர்ச்சி சம்பவம்!
சிட்னி: இந்திய அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அழைக்கப்பட்டாலும் தொடர்ந்து இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஏமாற்றம் அளித்து கொண்டே இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணியும் ஆஸ்திரேலிய ஏ அணியும் தற்போது மோதி வருகிறது.
இரண்டு அணிகளுக்கு இடையில் நடக்கும் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன் டிரைலர் போல இந்த போட்டி அமைந்துள்ளது.

ரிஷாப் பண்ட்
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் ரிஷாப் பண்ட் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் டெஸ்ட் அணியில் மட்டும் எடுக்கப்பட்டார். ஆனால டெஸ்ட் அணியிலும் கூட இவர் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கவில்லை.

பயிற்சி ஆட்டம்
முதல் பயிற்சி ஆட்டத்தில் ரிஷாப் பண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவரின் மோசமான பார்ம் காரணமாக மொத்தமாக ரிஷாப் பண்ட் புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் மட்டும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் இன்று இவருக்கு வாய்ப்பு கொடுத்த பின்பும் கூட அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயிற்சி ஆட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய வீரர்கள் ஆடிய அவுட்டான நிலையில் ரிஷாப் பண்ட் நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆடவில்லை
ஆனால் இன்றும் வந்த வேகத்தில் அவுட்டாகி ரிஷாப் பண்ட் வெளியேறினார்.11 பந்துகள் பிடித்த இவர் வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். இவருக்கு தேவையில்லாமல் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நீக்க வேண்டும்
இவரை மொத்தமாக அனைத்து போட்டிகளில் இருந்தும் நீக்க வேண்டும். இதற்கு பதிலாக மணீஷ் பாண்டே போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இனியும் ரிஷாப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்புகளை வழங்க கூடாது நெட்டிசங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications