இது உங்களுக்கு கடைசி வார்னிங்.. இளம் வீரருக்கு பிசிசிஐ போட்ட கேட்.. அடுத்து நடந்ததுதான் மாஸ் சம்பவம்
டெல்லி: இந்திய அணியை சேர்ந்த இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஆட்டம் கடந்த சில மாதங்களாக விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் நன்றாக ஆட தொடங்கி உள்ளார்.
இந்திய அணியின் அடுத்த தோனி என்று ஒரு காலத்தில் புகழப்பட்டவர் கீப்பர் ரிஷாப் பண்ட்.தொடக்க காலத்தில் இவர் அதிரடியாக ஆடிய காரணத்தால் இவர் மீது அதிக அளவில் நம்பிக்கை வைக்கப்பட்டது.
இதன் காரணமாக இந்திய அணியில் ரிஷாப் பண்டிற்கு நிறையவாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் கொடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ரிஷாப் பண்ட் மோசமாக சொதப்பி வந்தார்.

பார்ம் அவுட்
அதிலும் கடந்த ஒரு வருடமாக இவர் மோசமான பார்மில் இருந்தார். ஐபிஎல் தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை. அதேபோல் அதற்கு முன் இந்திய அணி கலந்து கொண்ட தொடர்களிலும் இவர் சரியாக ஆடவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்டங்களில் மிக மோசமாக சொதப்பினார்.

சொதப்பல்
இதோடு இல்லாமல் இன்னொரு பக்கம் இவர் தனது பிட்னஸையும் இழந்தார். ஐபிஎல் தொடரின் போதே இவர் காலில் வேறு காயம் ஏற்பட்டது.உடை எடை கூடி, வேகமாக ஓட முடியாமல் இவர் கஷ்டப்பட்டார். இவரின் உடல் எடை கூடியதை தொடர்ந்து பிசிசிஐ தேர்வுக்குழுவும் இவருக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

எடை கூடுதல்
உங்கள் எடை அதிகமாக இருக்கிறது. உங்களை இதனால் இந்திய டி 20, ஒருநாள் அணியில் எடுக்க முடியாது. டெஸ்ட் அணியில் மட்டுமே எடுப்போம் என்று பிசிசிஐ கூறியிருந்தது. ரிஷாப் பண்ட் உடனே தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்றும் கூட பிசிசிஐ எச்சரிக்கை விடுத்து இருந்தது.

எச்சரிக்கை
இந்த நிலையில் டெஸ்ட் அணியின் பயிற்சி ஆட்டத்திலும் முதல் இன்னிங்சில் இவர் 5 ரன்களில் அவுட்டானார். இதனால் இவர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை. அவரின் கதை முடிந்துவிட்டது என்று பலரும் டிவிட் செய்தனர். இந்த நிலையில்தான் நேற்று நடந்த இரண்டாவது இன்னிங்சில் பண்ட் அதிரடியாக ஆடி 103 ரன்கள் எடுத்தார்.

எத்தனை ரன்கள்
முதல் 61 பந்தில் 81 ரன்கள் எடுத்து இருந்தவர், கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்களை எடுத்து அதிரடியாக சதம் அடித்தார். மிகவும் அதிரடியாக ஆடி இவர் சதம் அடித்தது பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. நான் நல்ல பார்மில்தான் இருக்கிறேன். நான் இன்னும் எனது ஸ்டைலை இழக்கவில்லை என்பதை பண்ட் நிரூபித்து உள்ளார். டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் கலந்து கொள்ளும் வகையில் பண்ட் இந்த அதிரடி ஆட்டத்தை ஆடியுள்ளார்.


Click it and Unblock the Notifications