Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒவ்வொரு பாலும் பதற்றம்.. "சையின்டிபிக்" அணுகுமுறை.. சென்னையை மிரள வைத்த பண்ட்.. பரபர பின்னணி!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் ஒரு பக்கம் பண்ட் அதிரடி காட்டி வருகிறார்.

8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 324 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி அதிக ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது.

சென்னை

சென்னை

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார். பிட்ச் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கவில்லை என்றாலும் பண்ட் மிகவும் அதிரடியாகவும் அதே பக்கம் பொறுப்பாகவும் ஆடி வருகிறார். சென்னை பிட்ச் மொத்தமாக ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறினாலும், பண்ட் எந்த கவலையும் இன்றி ஆடுகிறார்.

ஆட்டம்

ஆட்டம்

பொதுவாக பண்ட் பேட்டிங் செய்யும் போது அவரை தவிர மற்ற எல்லோருக்கும் ஒரு பதற்றம் இருக்கும். எப்போது கேட்ச் கொடுப்பார். ஏன் இப்படி இறங்கி வந்து சிக்ஸ் அடிக்கிறார் என்று பலர் இவரின் பேட்டிங்கை பார்த்து பயந்து இருக்கிறார்கள். ஆனால் பண்ட் சரியாக திட்டமிட்டே பேட்டிங் செய்து வருகிறார்.

பேட்டிங்

பேட்டிங்

தனது பேட்டிங்கில் பண்ட் ஒரு சையின்டிபிக் முறையை கடைப்பிடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பண்ட் சிக்ஸ் அடிக்கிறார். ஆனால் எல்லா பந்திலும் சிக்ஸ் அடிக்கவில்லை. எந்த பந்தை அடிக்க வேண்டுமோ அந்த பந்தை தேடி பிடித்து சிக்ஸ், பவுண்டரி அடிக்கிறார்.

அணுகுமுறை

அணுகுமுறை

முறையாக திட்டமிட்டு பந்துகளை அணுகிறார். முடிந்த அளவு குல்தீப் யாதாவிற்கு ஸ்டிரோக் கொடுக்காமல் பொறுப்பாக ஆடுகிறார். ஒவ்வொரு ஓவரிலும் கடைசி பந்தில் சிங்கிள் அடித்து அடுத்த ஓவரில் ஸ்டிரைக் எடுக்கிறார். லோவர் எண்ட் வீரர்களுடன் பண்ட் பேட்டிங் செய்கிறார்.

கவலை இல்லை

கவலை இல்லை

ஆனாலும் அந்த அச்சம் இன்றி பண்ட் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதுதான் அவரின் இயல்பான ஆட்டம். இதை மற்றவர்களுக்கு பார்க்க பயம் கொடுத்தாலும், பண்டிடம் இதற்காக திட்டம் இருக்கிறது. இதுதான் இங்கிலாந்து வீரர்களை தற்போது திணற வைத்து இருக்கிறது.

Story first published: Sunday, February 14, 2021, 10:29 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+