For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலையை கொஞ்சம் கூட திருப்ப முடியவில்லை.. இந்த சின்ன வயதில் இவ்வளவு பிரச்சனையா? பாவம் ரிஷாப் பண்ட்!

சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்ட் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஏன் ஆடவில்லை என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

இரண்டு அணிகளும் இதற்காக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதியது. ஆனால் இரண்டு பயிற்சி ஆட்டமும் டிராவில் முடிந்தது.

டிரா

டிரா

இதில் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் பண்ட் சிறப்பாக ஆடி இருந்தார். அதிரடியாக ஆடி 73 பந்தில் 103 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இவர் 5 ரன்களில் அவுட்டாகி இருந்தார். இதையடுத்து இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம்

விமர்சனம்

இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது இன்னிங்சில் ரிஷாப் பண்ட் சதம் அடித்தார். ஆனால் இவர் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆடவில்லை. முதல் பயிற்சி ஆட்டத்தில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பயிற்சி ஆட்டத்தில் கூட இவரை எடுக்காதது ஏன் என்று கேள்வி நிலவி வந்தது.

கேள்வி

கேள்வி

இந்த நிலையில் இவருக்கு கழுத்தில் பிரச்சனை இருந்ததால் முதல் பயிற்சி ஆட்டத்தில் இவர் ஆடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் பயிற்சி ஆட்டத்தின் போது இவர் தலையை திருப்ப கூட முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். ஒரு பக்கம் மட்டுமே இவரால் பார்க்க முடிந்துள்ளது. கழுத்தை சுற்ற முடியவில்லை.

சுற்ற முடியவில்லை

சுற்ற முடியவில்லை

தலையை சுற்ற முடியாமல் இவர் கஷ்டப்பட்ட காரணத்தால் முதல் பயிற்சி ஆட்டத்தில் இவர் ஆடவில்லை. அதிக எடை காரணமாக இவருக்கு உடலில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு முன்பே இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இந்த காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

அதன்பின் இவர் உடல் எடை அதிகமாக இருக்கிறது. பி.எம்.ஐ தாறுமாறாக இருக்கிறது என்று பிசிசிஐ இவர் மீது புகார் வைத்துள்ளது. இதன் காரணமாகவே இவர் ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் கலந்து கொள்ளவில்லை. தற்போது டெஸ்ட் போட்டியிலும் இவர் கழுத்து வலி காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். இளம் வயதில் இவர் அடுத்தடுத்து காயம் , வலி என்று கஷ்டப்படுவது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Story first published: Monday, December 14, 2020, 23:53 [IST]
Other articles published on Dec 14, 2020
English summary
Rishabh Pant was struggling with neck lock during 1st practice test against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+