ஏஷியாட் பாட்மின்டன்... பதக்கம் வெல்ல காத்திருக்கும் மானசி ஜோஷி!
டெல்லி: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடக்கவுள்ள பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாட்மின்டன் பிரிவில் பதக்கம் வெல்லும் இலக்குடன் தயாராகி வருகிறார் மானசி ஜோஷி.
பாரா பாட்மின்டன் வீராங்கனையான, மும்பையைச் சேர்ந்த மானசி ஜோஷி,. சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த பாரா பாட்மின்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
29 வயதாகும் மும்பையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான மானசி, 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் இடது காலை இழந்தார்.
பாட்மின்டன் வீராங்கனையான அவர், மனம் தளராமல்தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். 2015 முதல் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

வென்ற பதக்கங்கள்
2015ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையரில் வெள்ளி, 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதைத் தவிர ஸ்பெயினில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்றார்.

வெண்கலம் வென்றார்
அந்த வரிசையில், தாய்லாந்தில் கடந்த மாத இறுதியில் நடந்த தாய்லாந்து பாரா பாட்மின்டன் போட்டியில் வெண்கலம் வென்றார்.

கோபிசந்திடம் பயிற்சி
பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் போன்றோருக்கு பயிற்சி அளித்து வரும் கோபிசந்திடம் தற்போது பயிற்சி பெற்று வருகிறார் மானசி. சிந்து, சாய்னா ஆகியோருடன் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார் மானசி.

ஆசிய விளையாட்டு
அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளார் மானசி. அதில் பதக்கம் வென்று வருவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications