7 வயசுதான்.. என்னா ஒரு டைமிங்.. எப்படிப்பட்ட புட் ஒர்க்.. யாரு சாமி இது!
டெல்லி: வெறும் 7 வயசுதான் ஆகிறது இந்தப் பொண்ணுக்கு. ஆனால் இது விளையாடும் விளையாட்டைப் பார்த்தால் பெரிய பெரிய ஆட்டக்காரர்களே அசந்து போய் விடுவார்கள்.
இந்த சிறுமியின் பெயர் பாரி சர்மா. சமூக வலைதளத்தில் இவர் தற்போது வைரலாகியுள்ளார். காரணம் இந்த குட்டிப் பெண் விளையாடும் கிரிக்கெட்தான். இப்பவே புலியாக இருக்கிறாள் இந்த சிறுமி.
அருமையான புட் ஒர்க். அழகாக பந்தை வாங்கி டைமிங்கோடு அடிக்கிறார். சூப்பராக இருக்கிறது பார்க்கவே. இந்த சிறுமியின் ஸ்டைலிஷான கிரிக்கெட் பலரையும் கவர்ந்து பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

7 வயதிலேயே திறமை
7 வயதேயாகும் பாரி சர்மா கிரிக்கெட் ரசிகை.. அத்தோடு அருமையாக கிரிக்கெட் ஆடவும் தெரிந்திருக்கிறது. இப்போது லாக்டவுன் என்பதால் எல்லாமே வீட்டுக்குள்தான். தனது வீட்டு அறையில் சூப்பராக கிரிக்கெட் ஆடுகிறார் இந்த சிறுமி. கை தேர்ந்த ஆட்டக்காரர்கள் போலவே படுகூலாக இவர் பந்தை எதிர்கொள்கிறார். பந்தை அடிக்கும் அந்த டைமிங், புட் ஒர்க், ஷாட் அடிப்பது என எங்கேயுமே குறை காண முடியவில்லை.

குவியும் பாராட்டுகள்
இந்த சின்னப் பெண்ணின் கிரிக்கெட்டைப் பார்க்க ரசிகர்கள் குவிகின்றனர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். ஏகப்பட்ட வீடியோக்கள் போட்டுள்ளார். எல்லாமே கிரிக்கெட் ஆடும் வீடியோக்கள்தான். எல்லாமே அருமையாக இருக்கிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்களே.. அதுபோல எதிர்காலத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக இவர் மிகப் பெரிய அளவில் ஜொலிப்பார் என்று இப்போதே தெரிகிறது.

எல்லாமே தெரிந்திருக்கிறது
இவர் கிரிக்கெட்டர் மட்டும் கிடையாதுங்க. நல்ல ஜிம்னாஸ்டிக்ஸும் செய்கிறார். அதிலும் புகுந்து விளையாடுகிறார். நல்லா ஒல்லிக் குச்சியாக இருப்பதால் ஈஸியாக உடலை வளைக்க முடிகிறது பாரி சர்மாவால். ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து அந்த வீடியோவையும் தனது பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதுதவிர யோகாவும் தினசரி செய்கிறாராம். மொத்தத்தில் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் பாரி சர்மா.

அப்பா, அம்மாவின் ஆதரவு
தனது வீட்டிலேயே எல்லா வகையான கிரிக்கெட் பயிற்சிகளையும் எடுக்கிறார். வீட்டுக்குள்ளேய பீல்டிங் பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று உள்ளது. அதில் ரோலிங் பயிற்சியை மேட் போட்டு அதில் மேற்கொள்கிறார். இந்த வயதிலேயே இப்படி ஈடுபாட்டுடன் அவர் இருப்பது பிரமிக்க வைக்கிறது. ஆச்சரியப்படுத்துகிறது. அனைத்து வகை திறமைகளுடன் கூடிய ஒரு வீராங்கனையாக பாரி வளர்ந்து வருவதில் அவரது பெற்றோருக்குத்தான் பெரும் பங்கு உள்ளது.


Click it and Unblock the Notifications