இன்னும் 6 நாட்களில் ஒலிம்பிக் தொடர்.. இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற 6 வீரர்கள் யார்?
சென்னை: 33வது ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக ஏராளமான நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் தயாராகி வரத் தொடங்கியுள்ளனர். இம்முறை இந்தியா தரப்பில் நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் பாரிஸ் சென்றுள்ளனர்.
இதனால் கடந்த முறையை காட்டிலும் இம்முறை அதிகளவிலான பதக்கங்களை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பாக பங்கேற்ற வீரர்கள் 35 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் தனி நபர் விளையாட்டில் இந்திய வீரர்களில் 6 பேர் 6 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதில் முதல்முறையாக இந்தியா சார்பாக 1900ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தொடரில் நார்மன் பிரிட்சார்ட் பங்கேற்றார். ஆங்கிலேய வழியில் வந்தவர் என்றாலும், இந்தியராக கருதப்பட்டார். 1875ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த இவர், 1900ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான 200 மீ தடை தாண்டுதல் மற்றும் ஆடவருக்கான 200மீ ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதன்பின் 2004ஆம் ஆண்டு ஏதன்ஸில் நடந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளி வென்று சாதித்தார். இதன்பின் 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான 25 மீ ரேபிட் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதேபோல் அதே ஒலிம்பிக்கில் ஆடவருக்கான மல்யுத்தப் போட்டியில் 66 கிலோ எடைப் பிரிவில் சுஷில் குமார் வெள்ளி வென்று அசத்தினார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் பிவி சிந்து வெள்ளி வென்று புதிய வரலாறு படைத்தார்.
அதேபோல் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் விஜய் குமார் தாஹியா வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். இம்முறை ஆசியப் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஏராளமானோர் பதக்கம் வென்று அசத்தியுள்ளதால், நிச்சயம் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications