Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 9 நாளில் 2024 ஒலிம்பிக்.. இந்தியா எத்தனை வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா?

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் வரும் ஜூலை 26 அன்று தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் இந்திய அணி இந்த முறை எத்தனை பதக்கங்களை வெல்லும்? என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்திய அணி ஒலிம்பிக் வரலாற்றில் 10 தங்கப் பதக்கங்களை வென்று உள்ளது. ஆனால். அதைவிட குறைவான எண்ணிக்கையிலேயே வெள்ளிப் பதக்கங்களை வென்று இருக்கிறது. பொதுவாக தங்கம் வெல்வது கடினம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வெல்வது எளிது என்ற எண்ணம் உள்ளது. ஆனால், இந்தியாவின் வெள்ளிப் பதக்க கணக்கை பொறுத்த வரை அது தலைகீழாக உள்ளது.

Paris Olympics 2024 2024

10 தங்கம் மற்றும் ஒன்பது வெள்ளி பதக்கங்களை வென்றுள்ள இந்தியா 16 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா வென்ற 9 வெள்ளி பதக்கங்களில் இரண்டு ஒரு ஆங்கிலேயரால் கிடைத்தது. 1900 மாவது ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் நார்மன் பிரிட்சர்ட் என்ற ஆங்கிலேயர் இரண்டு ஓட்டப் பந்தய போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றார். அதன் பின் 1960 இல் ஹாக்கி மூலம் இந்தியாவின் மூன்றாவது வெள்ளி பதக்கம் கிடைத்தது.

அடுத்த 2004 ஆம் ஆண்டில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நான்காவது வெள்ளி பதக்கத்தை வென்றார். 2012ல் விஜய் குமார் துப்பாக்கி சுடுதலில் ஐந்தாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டு மல்யுத்தத்தில் சுசில் குமார் மற்றுமொரு வெள்ளி பதக்கம் வென்றார்.

அடுத்து 2016 ஒலிம்பிக் தொடரில் பிவி சிந்து பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் ஏழாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2021 ஒலிம்பிக் தொடரில் பழு தூக்குதல் விளையாட்டில் சாய்க்கம் மீராபாய் சானு மற்றும் மல்யுத்தத்தில் ரவிக்குமார் தாஹியா ஆகியோர் இந்தியாவின் எட்டு மற்றும் ஒன்பதாவது வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

கடந்த மூன்று ஒலிம்பிக் தொடர்களிலும் இந்தியா தொடர்ந்து வெள்ளிப் பதக்கங்களை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா ஒலிம்பிக் விளையாட்டில் முன்னேறி வருவதற்கான நல்ல அறிகுறியாகவும் இருக்கிறது. இந்த முறை இந்திய அணி அதிக தங்கம் மற்றும் அதிக வெள்ளி பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, July 16, 2024, 17:43 [IST]
Other articles published on Jul 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+