Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் பதக்கம் உண்மையிலேயே தங்கமா? என்ன கலந்திருக்கிறது தெரியுமா? ஈபிள் டவரின் இரும்பும் இருக்கு

பாரிஸ் : விளையாட்டு வீரர்களின் கனவை எப்படியாவது ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று விட வேண்டும் என்பதுதான். இந்த தங்கப் பதக்கத்தை வென்றால் தங்கள் வாழ்வே மாறிவிடும் என்பதுதான் ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கின்றது.

நாட்டுக்காக இந்த தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்க்க ஒவ்வொரு வீராங்கனைகளும் வியர்வை சிந்தி உழைத்து வருகின்றனர். இந்த சூழலில் ரசிகர்கள் பலருக்கும் இந்த கேள்வி மனதில் நிச்சயம் இருக்கும்.

Paris Olympic 2024 2024 india contigent Gold medal

அதாவது ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் தங்கப்பதக்கம் உண்மையிலேயே தங்கமா இல்லை வேறு ஏதேனும் உலோகம் கலந்திருக்கிறதா என்று அனைவருக்கும் ஒரு சந்தேகம் நிச்சயம் இருக்கும். இந்த சூழலில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்கத்தில் உண்மையிலே தங்கம் கலந்திருக்கிறதா வேறு என்னென்ன உலோகங்கள் கலந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் விதிகள் படி ஒவ்வொரு தங்கப் பதக்கத்திலும் 92.5% சில்வர் கலந்து இருக்க வேண்டும்.எஞ்சிய ஆறு கிராம் தங்கம் தான் அதன் மேலே பூசப்பட்டிருக்கும். எனவே தங்கப்பதக்கம் வென்றாலும் அதில் 92.5 சதவீதம் வெள்ளி தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஞ்சியுள்ள ஆறு சதவீத தூய்மையான தங்கம் ஆகும்.

இதே போன்று வெண்கல பழக்கத்தில் 95% செம்பு (copper) 5% துத்தநாகம் ( Zinc) கலந்து இருக்கும்.டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட ஒரு தங்க பதக்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 69 ஆயிரம் ரூபாய் ஆகும். சுமார் 300 மேற்பட்ட போட்டி பிரிவில் தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் என்றால் அதில் வெறும் 6 கிராம் கலந்தால் மட்டும்தான் கொடுக்க முடியும்.

எனவே தங்கப்பதக்கம் முழுவதும் தங்கம் கிடையாது.இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரான்சின் சகாப்தத்தையும், பாரம்பரியத்தையும் நினைவுப்படுத்தும் விதமாக பதக்கத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது பாரிஸ் என்றாலே ஈபில் டவர் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்த ஈபில் டவர் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். அப்படி செய்யும் போது அதன் இரும்புகள் மாற்றப்படும்.

இந்த நிலையில் ஈபில் டவர் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட இரும்பை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் ஒவ்வொரு பதக்கத்திலும் கலந்து வைக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு பதக்கத்தின் நடுவிலும் ஈபில் கோபுரத்தின் இரும்பு கலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஈபிள் கோபுரத்தின் இரும்பு வீரர்களில் வாழ்நாள் முழுவதும் அந்த ஞாபகமாக கலந்திருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 18, 2024, 19:37 [IST]
Other articles published on Jul 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+