Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆலு பரோட்டா சாப்பிடனும் போல இருக்கு.. Dry Fruits மட்டும் தான் சாப்பிடுகிறேன்.. மனு பாக்கர் EXCLUSIVE

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனு பாக்கர் சாதனை படைத்திருக்கிறார். 22 வயதான அவர் 124 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில், ஒரே தொடரில் இரண்டு பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

இந்த நிலையில் பாரிஸில் உள்ள மைக்கேல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்காக கடும் உணவு கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக கூறியுள்ளார். தாம் கடந்த சில நாட்களாக காய்ந்த பழங்கள் மற்றும் யோகர்ட் வைத்து தான் உயிர் வாழ்வதாகவும் கூறியிருக்கிறார்.

Olympics 2024 shooting 2024

மேலும் கேபேஜ், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் தமக்கு கொடுக்கப்பட்டு வருவதாக மனு பாக்கர் கூறியுள்ளார். தாம் எப்போது வீட்டுக்கு சென்று ஆலு பரோட்டாவை சாப்பிட போகிறேன் என்று காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். தமது செயல்பாடு இதுவரை நன்றாக இருப்பதாகவும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தரவரிசையில் பின்தங்கியதாகவும் மனு பார்க்ர் கூறியுள்ளார்.

தொடர்ந்து கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்று சாதனை படைத்தது மகிழ்ச்சி அளித்ததாகவும், இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருப்பதால் அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்பதாக மனு பாக்கர் கூறியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றில் பங்கேற்கிறார். அதில் தகுதிப் பெற்றால் ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறும்.

இதனிடையே மனு பாக்கரின் பயிற்சியாளர் ஜஸ்பல் ராணாவுக்கு புகழ் சேர்ந்தாலும், தற்போது வரை அவருக்கு வேலை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மைக்கேல் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,தமக்கு மூன்று ஆண்டுகளாக பணி இல்லை என்றும் இந்தியா சென்றவுடன் தமக்கு யாராவது வேலை வழங்குவார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார். தமக்கு இந்திய ரைப்பில் அசோசியேஷனிலிருந்து சம்பளம் வருவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Story first published: Thursday, August 1, 2024, 22:59 [IST]
Other articles published on Aug 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+