For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒலிம்பிக் வரலாறு - 124 வருட ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற நாடு எது?

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் ஜூலை 26 அன்று தொடங்க உள்ளது. இதுவரை ஒலிம்பிக் தொடர்களில் அமெரிக்காவே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 124 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா இதுவரை மொத்தம் 2959 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 1175 தங்கப் பதக்கங்கள் அடங்கும். 951 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 833 வெண்கல பதக்கங்களையும் அமெரிக்கா வென்றுள்ளது. உலக நாடுகளிலேயே ஆயிரம் தங்கப் பதக்கங்கள் வென்ற முதல் நாடு அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த நாடும் இன்னும் ஆயிரம் தங்கப் பதக்கங்களை எட்டவில்லை.

Paris Olympics 2024 2024

அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் ரஷ்யா பல்வேறு பெயர்களில் பங்கேற்று உள்ளது. ரஷ்யா, ரஷ்யன் எம்பயர், சோவியத் யூனியன், யூனிஃபைடு டீம் ஆஃப் ரஷ்யா, ரஷ்யாவை சேர்ந்த ஒலிம்பிக் வீரர்கள் குழு, ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி என பல்வேறு பெயர்களில் ரஷ்யா ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்று உள்ளது. அதில் ஒட்டுமொத்தமாக 2011 பதக்கங்களை வென்று இருக்கிறது. மொத்தம் 749 தங்கப் பதக்கங்களையும், 635 வெள்ளிப் பதக்கங்களையும், 627 வெண்கல பதக்கங்களையும் ரஷ்யா வென்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. ஜெர்மனியும் பல்வேறு பெயர்களில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜெர்மனி, யுனைடெட் டீம் ஆப் ஜெர்மனி, வெஸ்ட் ஜெர்மனி, ஈஸ்ட் ஜெர்மனி ஆகிய பெயர்களில் பங்கேற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜெர்மனி 1821 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 600 தங்கப் பதக்கங்கள், 612 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 609 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

நான்காவது இடத்தில் கிரேட் பிரிட்டன் உள்ளது. அந்த நாடு மொத்தமாக 950 பதக்கங்களை வென்றுள்ளது. ஐந்தாம் இடத்தில் சீனா 713 பதக்கங்களுடன் உள்ளது. சீனா கடந்த 1984இல் இருந்து தான் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆறாவது இடத்தில் ஃபிரான்ஸ் (889 பதக்கங்கள்), ஏழாவது இடத்தில் இத்தாலி (759 பதக்கங்கள்), எட்டாவது இடத்தில் ஸ்வீடன் (679 பதக்கங்கள்), ஒன்பதாவது இடத்தில் நார்வே (568 பதக்கங்கள்) பத்தாவது இடத்தில் ஜப்பான் (573 பதக்கங்கள்) உள்ளன. இதில் ஜப்பான் நார்வே-வை விட குறைந்த அளவில் தங்கப் பதக்கங்கள் வென்று இருப்பதால் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா மொத்தம் 35 பதக்கங்கள் மட்டுமே வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 16 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 56வது இடத்தில் உள்ளது.

Story first published: Tuesday, July 23, 2024, 19:18 [IST]
Other articles published on Jul 23, 2024
English summary
Paris Olympics 2024: Which country won the most medals in Olympic history?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+