Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA 20 தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே.. ராயல்ஸ் அணியிடம் வீழ்ந்தது

செஞ்சூரியன்: SA20 எலிமினேட்டர் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பார்ல் ராயல்ஸ் குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பார்ல் ராயல்ஸ் பேட்டிங்கில், லூயன்-ட்ரே பிரிட்டோரியஸ் 34 பந்துகளில் 51 ரன்கள் (5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) அடித்து முன்நின்றார். தொடக்க வீரர் கைல் வெர்ரெய்ன் 15 பந்துகளில் 30 ரன்களும் (4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்), டான் லாரன்ஸ் 23 பந்துகளில் 36 ரன்களும் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர். ஆசா ட்ரைப் கடைசி ஓவர்களில் 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஜேஎஸ்கே அணியின் பந்துவீச்சில் நகோபானி மொகோயனா முக்கிய பங்காற்றினார். அவர் எதிரணி கேப்டன் ஜேம்ஸ் வின்சை 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழக்க செய்தார். அவருடைய இன்னிங்சில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அப்போது ராயல்ஸ் அணி 12வது ஓவரில் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் ராயல்ஸ் அணி வலுவான இலக்கை நிர்ணயித்தது.

சவாலான 211 ரன்கள் இலக்கை துரத்திய ஜாபர்ஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சியளித்தது. நான்கு ஓவர்களுக்குள் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பவர்-ப்ளேயின் முடிவில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. ஹார்டுஸ் வில்ஜோன் தனது சிறப்பான பந்துவீச்சில் நீல் டிரிம்மர்ஸை (8) வெளியேற்றினார். மேத்யூ டி வில்லியர்ஸை (0) பியோர்ன் ஃபோர்டுயின் வசம் கேட்ச் பிடிக்கவைத்தார்.

அடுத்து பியோர்ன் ஃபோர்டுயின் ரில்டோ மூன்சாமியை (3) சிக்கவைத்து, ஆரம்பத்திலேயே ஜேஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார். ஜேஎஸ்கே அணி மீண்டு வர முயற்சித்த போதும், அபார ஃபார்மில் இருந்த ஓட்னெயில் பார்ட்மேன் தனது பங்கிற்கு மேலும் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

லேயூஸ் டு ப்ளூய் (10) மற்றும் வையான் முல்டர் (27 பந்துகளில் 41 ரன்கள்; 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) சிக்கந்தர் ராசா வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆட்டத்தின் முதல் பாதியிலேயே பல முக்கிய விக்கெட்டுகளை இழந்த சூப்பர் கிங்ஸ் அணியால் அதன்பின் மீளவே முடியவில்லை.இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களுடன் தோல்வியைத் தழுவியது. குவாலிஃபையர் 2 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி, வரும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொள்ளும்.

Story first published: Friday, January 23, 2026, 13:01 [IST]
Other articles published on Jan 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+