
அறிமுகம்
பார்த்திவ் பட்டேல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணியில் 2002இல் அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வயது 17 தான். அந்த இளம் வயதில் கங்குலி தலைமையில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன், கும்ப்ளே உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்களுடன் ஆடினார் அவர்.

வாய்ப்பை தவறவிட்டார்
இந்திய அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேடலில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அப்போது சரியாக பயன்படுத்தவில்லை. அதன் பின் தினேஷ் கார்த்திக் மற்றும் தோனிக்கு அவரது வாய்ப்பு கிடைத்தது.

குஜராத் அணி
அதில் தோனி இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் மாறிய நிலையில் பார்த்திவ் பட்டேல் இந்திய அணியில் நுழையும் வாய்ப்பை தவறவிட்டார். எனினும், உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காக சிறப்பாக ஆடி வந்தார்.

35 வயதில் ஓய்வு
ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து போட்டிகளில் ஆடி வந்தார். 2020 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவருக்கு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பை வழங்கவில்லை. இந்த நிலையில் அவர் 35 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நன்றி
பார்த்திவ் பட்டேல் தனது ஓய்வு அறிவிப்பில் 17 வயதில் தனக்கு வாய்ப்பு அளித்த பிசிசிஐக்கும், முதன் முதலில் தன்னை நம்பிய கேப்டன் கங்குலிக்கும் நன்றி கூறி உள்ளார். தனக்கு கேப்டனாகவும் வாய்ப்பு அளித்த குஜராத் கிரிக்கெட் அமைப்புக்கும் நன்றி கூறி உள்ளார்.

எத்தனை போட்டிகள்?
பார்த்திவ் பட்டேல் 25 டெஸ்ட் போட்டிகளிலும், 38 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார். டெஸ்டில் அவர் 934 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 736 ரன்கள் குவித்துள்ளார். அவரொரு சர்வதேச சதம் கூட அடிக்கவில்லை.

அதிக ரன்கள்
6 டெஸ்ட் அரைசதம் மற்றும் 4 ஒருநாள் போட்டி அரைசதம் அடித்துள்ளார். இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 204 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் 11,240 ரன்கள் குவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












