Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் வாழ்வில் மிக முக்கியம் இது.. இதை விட சூப்பர் வாய்ப்பு கிடைக்காது.. பார்தீவ் கூறிய அட்வைஸ்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி விராட் கோலிக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமான ஒன்று என்ன முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்த பேச்சுக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

இந்தியா - இங்கிலாந்து மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஐசிசியின் தொடர்

ஐசிசியின் தொடர்

இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவ கிரிக்கெட் போட்டியிலும் விராட் கோலி சிறந்த கேப்டனாகவே உள்ளார். சமீபத்தில் நடந்த அனைத்து தொடர்களையும் வென்று கொடுத்துள்ளார். ஆனால் ஐசிசி கோப்பை என்பது மட்டும் கோலிக்கு இன்னும் எட்டா கனியாகவே உள்ளது. 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை என 2 ஐசிசி தொடர்களை கோலி வழிநடத்தியுள்ளார். ஆனால் இதில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோலிக்கு ஒரு பெரிய வாய்ப்பாக உள்ளது.

 மைல்கல்

மைல்கல்

இதுகுறித்து பேசியுள்ள பார்த்தீவ் பட்டேல், ஐசிசி கோப்பையையே வென்றிடாத விராட்டுக்கு இந்து ஒரு நல்ல வாய்ப்பு. இதில் மட்டும் வெற்றி பெற்று கொடுத்துவிட்டால் அது கோலியின் கேப்டன்சியில் ஒரு புதிய மைல்கல்லாக பாராட்டப்படும்.

 ஸ்பெஷல் நபர்

ஸ்பெஷல் நபர்

ஒருவர் முதல் ஆளாக ஒரு சாதனை செய்பவர் மிகவும் ஸ்பெஷலாக உற்றுநோக்கப்படுவார்.அந்த வகையில் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கோலி வென்றாக வேண்டும். தொடரின் பாதியில் விதிமுறைகள் மாற்றப்பட்டன, புள்ளிவிகிதங்கள் மாற்றப்பட்டன. எனினும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. எனவே மீதமுள்ள பணியை கோலி செய்து முடிக்க வேண்டும் என பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இதனிடையே இந்திய அணி தங்களது பயிற்சியை இன்று முதல் தொடங்கியுள்ளனர். 3 நாட்கள் கடும் குவாரண்டைன் இருக்க வேண்டும் எனக்கூறப்பட்ட நிலையில் இன்று தொடங்கிவிட்டனர். இன்று சிறு சிறு பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்ட நிலையில் நாளையில் இருந்து முழு வீச்சில் பயிற்சிகள் இருக்கும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Sunday, June 6, 2021, 9:24 [IST]
Other articles published on Jun 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+