For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு கண்டம் உள்ளது.. பார்த்தீவ் பட்டேல் எச்சரிக்கை.. டி20 உலகக்கோப்பையில் இதுவும் உள்ளதோ?

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணிக்கு முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்கை ஏன் எடுக்கல? போர்க்கொடி தூக்கும் முன்னாள் வீரர்கள்

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட படையை அறிவித்து வருகின்றனர்.

 டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வழக்கம் போல தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை தான் எதிர்கொள்ளவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க உள்ளிட்ட அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விகளுக்கு இந்தியா பதிலடி தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 பார்த்தீவ் பட்டேல் கருத்து

பார்த்தீவ் பட்டேல் கருத்து

இந்நிலையில் அது மிகவும் கடினம் என இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டியது மிக அவசியம். 50 ஓவர் கிரிக்கெட்டில் முதலில் சொதப்பினால் பின்னர் சரிசெய்துக்கொள்ளலாம். ஆனால் டி20 உலகக்கோப்பையில் சற்று சொதப்பினால் கூட மொத்த திட்டத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும்.

பாகிஸ்தானின் நம்பிக்கை

பாகிஸ்தானின் நம்பிக்கை

பாகிஸ்தான் அணி, கடந்தாண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றியே இந்தியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதுவும் பல ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்த போதும் அசால்டாக சாதித்தது. பின்னர் ஆசிய கோப்பையில் மீண்டும் ஒருமுறை வீழ்த்தினர். இதனால் இந்தியாவை வீழ்த்தும் நம்பிக்கை அதிக அளவில் அவர்களுக்கு உள்ளது.

ஒரு வெற்றி தேவை

ஒரு வெற்றி தேவை

டி20 உலகக்கோப்பை போன்ற சிறிய தொடர்களில் மீண்டு வருவது என்பது கடினமான ஒன்றாகும். ஐபிஎல்-ல் கம்பேக் கொடுப்பது உண்மை தான். ஆனால் கம்பேக் தருவதற்கு அங்கு 14 போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக்கோப்பையில் அப்படி இல்லை. இங்கு பாகிஸ்தான் அல்லது தென்னாப்பிரிக்கா ஏதேனும் ஒன்றை வீழ்த்தியே தீர வேண்டும். அதுவும் வெற்றியுடன் தொடங்க வேண்டும். இதனால் இந்த முறை இந்தியாவுக்கு கடுமையான சவால் உள்ளது என பார்த்தீவ் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 16, 2022, 21:00 [IST]
Other articles published on Sep 16, 2022
English summary
Ex - Indian player gives a strong warning to Team India to face pakistan in t20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+