Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்கள சாதாரணமா நினைக்காதீங்க..அந்த விஷயத்துல அவருலாம் ஸ்பெஷலிஸ்ட்..எச்சரிக்கும் பார்த்தீவ் பட்டேல்

சென்னை: சி.எஸ்.கே அணி குறித்தும் தோனி குறித்து ஒரு விஷயத்தில் மட்டும் தப்பு கணக்கு போட கூடாது என பார்த்தீவ் பட்டேல் எச்சரித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சி எடுத்து வரும் நிலையில் தோனியின் பக்கம்தான் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

பயிற்சி தொடங்கி ஒருவாரம் ஆன நிலையில் சி.எஸ்.கே அணியும் தோனியும் இந்த முறை மீண்டும் அதிரடி காட்டுவார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பயிற்சி

பயிற்சி

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வரும் ஏப் 10ம் தேதி எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக கேப்டன் எம்.எஸ்.தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். கடந்த முறை சென்னை அணி படுதோல்வி சந்தித்ததால் இந்த முறை மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விமர்சனம்

விமர்சனம்

கடந்த ஆண்டு தோனிக்கு பேட்டிங்கிலும் சரி, கேப்டன்சியிலும் சரி விமர்சனங்கள் அடுத்தடுத்து விழுந்தது. குறிப்பாக ஐபிஎல் முதல் முறையாக தோனி கடந்த சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக அவர் 200 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மேலும் அவருக்கு 40 வயது எட்டவுள்ளதால் அவரின் ஆட்டம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த முறை ஹோம் அட்வாண்டேஜும் இல்லாததால் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பார்த்தீவ் கருத்து

பார்த்தீவ் கருத்து

சி.எஸ்.கேவையும் தோனியையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். டி20 போட்டியில் கேப்டனின் செயல்பாடு மிக முக்கியம். ஏனென்றால் அவரின் முடிவு தவறாக சென்றால் ஆட்டம் தோல்விதான். தோனி அதில் கில்லாடி. 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு சி.எஸ்.கே மிகச்சிறப்பாக கம்பேக் கொடுத்தது. கடந்த ஆண்டு மோசமான ஆண்டாக இருந்தது. ஆனால் 13 வருடங்களாக சிறப்பாக இருந்து வரும் அந்த அணிக்கு அது சகஜம் தான்.

அணியில் குழப்பம்

அணியில் குழப்பம்

சென்னை அணி தீவிர பயிற்சியில் உள்ளது. அவர்கள் நல்ல வீரர்களை எடுத்துள்ளனர். ஆனால் மொயீன் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதமை எப்படி மும்பை பிட்ச்-ல் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதே பெரிய கேள்வி. சென்னை களம் என்றால் அவர்கள் இருவரும் அணிக்கு மிகச்சிறந்த தேர்வு. ஆனால் தற்போது அனைத்தும் முடிந்து விட்டது. எனினும் இருக்கும் வீரர்களை வைத்து தோனி சிறப்பாக கையாள்வார் என பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 17, 2021, 22:49 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+