Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை தோல்விக்கு அது மட்டுமே காரணம்.. டி.கே.வுக்கு துரோகம் நடந்ததா.. பார்த்தீவ் பட்டேல் பேச்சு

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு தினேஷ் கார்த்திக் புறகணிக்கப்பட்டது தான் காரணம் என பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்து வெளியேறியது.

Parthiv patel opens up about reason behind team india lose in t20 world cup 2022

இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை ரசிகர்கள் அடுக்கிக்கொண்டே வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மீது அதிக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தோல்விக்கு காரணம் தினேஷ் கார்த்திக் இல்லாதது தான் என பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தேவையான வீரர்களை தொடக்கதிலேயே கண்டறிந்து அவர்களுக்கு கடைசி வரை வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக் இருந்திருக்க வேண்டும்.

லீக் போட்டிகளில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக்கிற்கு சரியாக செமி ஃபைனல் வரும் நேரத்தில் வாய்ப்பு தராமல் ஏமாற்றினர். ஜிம்பாப்வே போட்டியில் சொதப்பிய ரிஷப் பண்ட்-க்கு மீண்டும் இங்கிலாந்துடனான பெரிய போட்டியில் வாய்ப்பு தரப்பட்டது. அந்த இடத்தில் தான் தினேஷ் கார்த்திக் அடிக்கும் 15 - 20 ரன்கள் குறைவாக சென்றது.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், பினிஷிங் என்பது பெரிய ரன்களை குவிக்கும் வேலை கிடையாது என்பதையும் கடைசி நேரத்தில் முக்கிய ரன்களை எடுக்கும் வேலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரோகித் சர்மா என்னை ப்ளேயிங் 11ல் சேர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் கடைசியில் சொதப்பியது எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 18, 2022, 23:28 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+