Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த விஷயத்தில் கொஞ்சம் கூட பொறுமையே கிடையாது.. இந்திய அணி செய்த தவறு.. புட்டு புட்டு வைத்த வீரர்!

மும்பை : இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் விஷயத்தில் பொறுமையே இல்லாமல் நடந்து கொள்வதாக சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார் விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல்.

Recommended Video

How Dhoni changed between 2007 and 2013, says Irfan Pathan

இந்திய அணியில் தோனிக்கு பின் நிலையான விக்கெட் கீப்பர் என யாரையும் கூற முடியாத நிலையே உள்ளது.

ஒருநாள், டி20 அணியில் மட்டுமல்ல. டெஸ்ட் அணியிலும் அதே நிலை தான். அதுபற்றி விளக்கமாக கூறி இருக்கிறார் பார்த்திவ் பட்டேல்.

17 வயதிலேயே அறிமுகம்

17 வயதிலேயே அறிமுகம்

இந்திய அணியில் 17 வயதிலேயே அறிமுகம் ஆனார் பார்த்திவ் பட்டேல். ஆனால், அவரால் தொடர்ந்து சிறப்பாக ரன் குவிக்க முடியவில்லை. கேப்டன் கங்குலி அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கியும் பயன் இல்லை. அவரை அடுத்து தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ந்தார்.

தோனி வந்தார்

தோனி வந்தார்

ஆனால், தினேஷ் கார்த்திக்கும் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், தோனி சில போட்டிகளிலேயே சதம் அடித்து அணியில் தன் இடத்தை நிரந்தரமாக மாற்றிக் கொண்டார். அதன் பின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணியில் அவரே விக்கெட் கீப்பராக நீடித்தார்.

சாஹா காயம்

சாஹா காயம்

டெஸ்ட் அணியில் தோனி ஓய்வு பெற்ற பின் விரிதிமான் சாஹா விக்கெட் கீப்பராக இருந்தார். இடையே அவருக்கு மோசமான காயம் ஏற்படவே அதில் இருந்து அவர் மீள அதிக காலம் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் இடம் பெற்றனர்.

பொறுமை இல்லை

பொறுமை இல்லை

அதைப் பற்றித் தான் விமர்சனம் செய்து உள்ளார் பார்த்திவ் பட்டேல். "விக்கெட் கீப்பர்களிடம் நாம் பொறுமை இன்றி நடந்து கொள்கிறோம் என நான் நினைக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு தொடரிலும் ஆடுவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது." என்றார்.

ஆளுக்கு இரண்டு டெஸ்ட்

ஆளுக்கு இரண்டு டெஸ்ட்

மேலும், "நான் தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் ஆடினேன். தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் ஆடினார். ஆஸ்திரேலியாவில் கார்த்திக், சாஹா இரண்டு பேருமே இல்லை. ரிஷப் பண்ட் ஆடினார். என்னைப் பொறுத்தவரை நாம் உடையாத பொருளை ஓட்ட வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்" என்றார் பார்த்திவ்.

சாஹா போதும்

சாஹா போதும்

"தற்போது அணியில் சாஹா இருக்கிறார். நாம் வேறு எதுவும் செய்ய எந்த காரணமும் இல்லை. இங்கிலாந்தில் என்னை துவக்க வீரராக ஆடச் சொன்ன போது நான் ஆடினேன். 5வது டெஸ்டில் விஜய் காயம் அடைந்த போது, நான் 170 ஓவர்கள் கீப்பிங் செய்த பின் துவக்கம் அளித்தேன்" என்றார் பார்த்திவ் பட்டேல்.

Story first published: Sunday, June 28, 2020, 19:50 [IST]
Other articles published on Jun 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+