Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெண்டு தமிழ்நாட்டு வீரர்கள் அதகளம்... பார்ட்னர்ஷிப்பில் கலக்கிய சுந்தர் & அஸ்வின்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

91 ஓவர்களில் இதுவரை 318 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி அஸ்வின் ஆகிய தமிழ்நாட்டு வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 95 ரன்களை குவித்தனர்.

4வது நாள் ஆட்டம்

4வது நாள் ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தவித்த நிலையில் ரிஷப் பந்த், புஜாரா பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதிரடி பார்ட்னர்ஷிப்

அதிரடி பார்ட்னர்ஷிப்

அவர்கள் இருவரும் தலா 91 மற்றும் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் தலா 64 மற்றும் 31 ரன்களை அடித்து பார்ட்னர்ஷிப்பில் 95 ரன்களை எடுத்து அணியை சிறப்பாக கொண்டு சென்றனர்.

அதிரடி பவுண்டரிகள்

அதிரடி பவுண்டரிகள்

கடந்த 3 டெஸ்ட் இன்னிங்சில் இரண்டாவது அரைசதத்தை வாஷிங்டன் சுந்தர் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் 82 பந்துகளில் அவர் அரைசதத்தை கடந்துள்ளார். இதில் 9 பவுண்டரிகளும் அடக்கம். ஸ்பின் பந்துகளை இவர் அதிரடியாக கையாண்டு ரன்களை குவித்துள்ளார்.

70 ரன்கள் தேவை

70 ரன்கள் தேவை

31 ரன்களை எடுத்து அஸ்வின் அவுட்டான நிலையில், தற்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் இஷாந்த் சர்மா விளையாடி வருகின்றனர். இந்தியா பாலோ ஆனை தவிர்க்க 70 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை இந்தியா அடித்திருந்த நிலையில் அஸ்வின் மற்றும் சுந்தரின் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Story first published: Monday, February 8, 2021, 11:46 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+