For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டேவிட் வார்னருக்கு துரோகம் செய்த ஆஸ்திரேலியா.. கேப்டன்சி நியமனத்தில் ஏமாற்றம்..கொந்தளித்த ரசிகர்கள்

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்சி தேர்வில் டேவிட் வார்னர் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்த முறையும் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய டி20 அணி முனைப்பு காட்டி வருகிறது.

 கேப்டன்சி

கேப்டன்சி

இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் யார் என்ற சர்ச்சையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆரோன் ஃபிஞ்ச் டி20 அணியை மட்டும் இனி வழி நடத்துகிறேன் எனக் கூறினார். இதனால் அந்த அணிக்கு அடுத்த கேப்டன் யார் ? என்ற விவாதம் நீடித்து வந்தது. இந்த போட்டியில் டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் என பலர் இருந்தனர்.

தடை இல்லை

தடை இல்லை

இதில் வார்னருக்கு தான் கேப்டன்சி கொடுக்கவுள்ளனர் எனத்தகவல் வெளியானது. இதற்கேற்றார் போலவே ஆஸ்திரேலிய வாரியத்தின் நடவடிக்கையும் இருந்தது. அதாவது தடை காலத்தை அனுபவித்த வார்னர், மீண்டும் கேப்டன்சி செய்ய எந்தவித தடையும் இல்லை என அறிவித்தது. இதனால் வார்னர் தான் ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

ஏமாந்த ரசிகர்கள்

ஏமாந்த ரசிகர்கள்

இந்நிலையில் அவருக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அந்நாட்டின் டெஸ்ட் அணியை வழிநடத்தி வருகிறார். அதில் சிறப்பான கேப்டன்சி செய்வதால், ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வார்னருக்கு நிறைய கேப்டன்சி அனுபவங்கள் உள்ளன. அப்படி இருக்கையில் வேண்டுமென்றே அவரை புறகணித்ததாக ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

புதிய சாதனை

புதிய சாதனை

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இதுவரை ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூட ஒருநாள் அணியை வழிநடத்தியதில்லை. அந்தவகையில் பேட் கம்மின்ஸ் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெறும் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, October 18, 2022, 17:06 [IST]
Other articles published on Oct 18, 2022
English summary
Pat cummins Announced as the New ODI Captain Australia , David warner in disappointment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+