Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாட் கமின்சின் ஐபிஎல் செக்கை வைத்து அதிக பொம்மைகள் வாங்க அவரது காதலி விருப்பம்

சிட்னி : ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்சின் ஐபிஎல் செக்கை வைத்து அவருடைய காதலி தங்களின் நாய்க்குட்டிக்கு அதிகளவில் பொம்மைகள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனுக்காக அதிக விலைக் கொடுத்து ஆஸ்திரேலியா வீரர் பாட் கமின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். 15.5 கோடி ரூபாய் கொடுத்து அவர் வாங்கப்பட்டுள்ளார்.

இதுவரை 16 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பாட் கமின்ஸ், 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் சராசரி 29.35 ஆகும்.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்

அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்

கொல்கத்தாவில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸ் அதிக விலை கொடுத்து அதாவது 15.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பிக் பாஷ் லீக்கிலும் தேர்வு

பிக் பாஷ் லீக்கிலும் தேர்வு

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற கௌரவம் பாட் கமின்ஸுக்கு கிடைத்துள்ளது. மேலும் பிக் பாஷ் லீக் தொடரிலும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

17 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்

17 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்

இதுவரை 16 ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள பாட் கமின்ஸ், 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் சராசரி 29.35ஆக உள்ள நிலையில், ஒரு போட்டியில் 20 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது அதிகபட்ச சாதனையாக உள்ளது.

வெளிப்படுத்திய பாட் கமின்ஸ்

வெளிப்படுத்திய பாட் கமின்ஸ்

இந்நிலையில் ஐபிஎல்லில் கிடைக்கவுள்ள இந்த அதிகப்படியான தொகையை கொண்டு தன்னுடைய காதலி பெக்கி பாஸ்டன், தங்களின் நாய்க்குட்டிக்கு அதிகளவிலான பொம்மைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய கமின்ஸ்

3 விக்கெட்டுகளை வீழ்த்திய கமின்ஸ்

டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாட் கமின்ஸ், பெர்த்தில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் 2வது போட்டி நாளையும், 3வது மற்றும் இறுதிப் போட்டி ஜனவரி 3ம் தேதியும் நடைபெறவுள்ளது.

Story first published: Wednesday, December 25, 2019, 12:57 [IST]
Other articles published on Dec 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+