Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர் ஒருத்தர் தான் எங்களுக்கு அச்சுறுத்தல்”.. இந்தியாவுடனான டி20 தொடர்.. பேட் கம்மின்ஸ் பேச்சு!

மும்பை: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஒரே ஒரு வீரர் தான் ஆஸ்திரேலியாவுக்கு தலைவலியாக இருப்பார் என ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Recommended Video

IndvsAus | Virat Kohli திரும்ப formக்கு வந்தது Australiaக்கு பெரிய தொல்லையா இருக்கும் - Pat Cummins

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரிய மைதானத்தில் தொடங்குகிறது.

 ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆஸ்திரேலிய டி20 தொடர்

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் தயாராவதற்கான வழியாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இரு அணிகளும் மோதும் தங்களது முழு பலத்தை காண்பித்து இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதனால் ப்ளேயிங் 11, வியூகங்கள், பேட்டிங் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

கம்மின்ஸ் பேச்சு

கம்மின்ஸ் பேச்சு

இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு வீரர் தான் அச்சுறுத்தல் கொடுப்பதாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கொரோனா பிரச்சினைகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ளோம். கோடிக்கணக்கான மக்களுக்கு மத்தியில் விளையாடும் உணர்வை இந்திய மக்கள் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு உற்சாகம் இருக்கும்.

அச்சுறுத்தும் வீரர்

அச்சுறுத்தும் வீரர்

இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு விராட் கோலி தான் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என நினைக்கிறேன். ஆசிய கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடியதை பார்த்தேன். குறிப்பாக ஆஃப்கானிஸ்தான் போட்டியில் சதம் விளாசினார். அவரை சமாளித்தால், இந்தியாவை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம் என நினைப்பதாக பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

கோலியின் ஆட்டம்

கோலியின் ஆட்டம்

இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி ஆக்ரோஷ ஆட்டத்தை குறைத்துள்ளதாக தெரிகிறது. ஓப்பனிங் வீரர்கள் வெகுவிரைவாக அவுட்டானால், கடைசி வரை கோலி நிலைத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே விராட் கோலி தரையோடு ஒட்டிய ஷாட்களை அடிக்க தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Monday, September 19, 2022, 13:55 [IST]
Other articles published on Sep 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+