Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்.. புதிய கேப்டனாக வந்த சர்ச்சை நபர்.. இந்தியாவுக்கு சாதகமா?

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் இருந்து விலகுவதாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஒன்றாம் தேதி இந்தூர் நகரில் தொடங்குகிறது. இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ள நிலையில் நாளை மீண்டும் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

3வது டெஸ்ட் விலகல்

3வது டெஸ்ட் விலகல்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் குடும்ப சூழல் காரணமாக தாயகம் திரும்பினார். எனினும் மூன்றாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு இந்தியா வந்து விடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் இந்தியாவுக்கு திரும்பும் முடிவிலிருந்து பின்வாங்கி இருக்கிறேன்.

உயிருக்கு போராட்டம்

உயிருக்கு போராட்டம்

எனது தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனால் அவருடைய கடைசி காலத்தில் நான் என் குடும்பத்தினருடன் இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கிறேன். என்னுடைய நிலையை புரிந்து கொண்டு எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

குறிப்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் எனது சக அணி வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் இல்லாததால் துணை கேப்டனாக இருந்த ஸ்மித் மூன்றாவது டெஸ்டில் கேப்டன் பணியை பார்ப்பார் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஸ்மித் கடந்த டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரின் போது கேப்டன் பதவியை பார்த்தார்.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

அப்போது கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியது அடுத்து அந்த பணியை ஸ்மித் செய்தார். தற்போது அவருக்கு மீண்டும் கேப்டன் பதவி மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. பாட் கம்மின்ஸ் பதிலாக மாற்றுவீரரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. கம்மின்ஸ் இடத்தை மிட்செல் ஸ்டார்க் அல்லது ஸ்காட் போலாந்து ஆகியோர் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, February 24, 2023, 12:39 [IST]
Other articles published on Feb 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+