Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி ஆஸ்திரேலியா தொடரில் அமைதியா இருப்பாரா?.. அட போங்கப்பா! அதுக்கு வாய்ப்பே இல்லை!!

Recommended Video

கோலி ஆஸ்திரேலியா தொடரில் அமைதியா இருப்பாரா?.. வீடியோ

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே மூன்று வித கிரிக்கெட் போட்டித் தொடர்களிலும் பங்கேற்க உள்ளது.

இந்த தொடருக்கு கிளம்பும் முன் கோலி, ஆஸ்திரேலியாவில் எந்த வம்புக்கும் தானாக போக மாட்டேன், அதே சமயம் ஆஸ்திரேலிய அணி வம்பிழுத்தால், சும்மா இருக்க மாட்டோம் என கூறினார்.

இதற்கு ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் பதில் கூறியுள்ளார்.

ஆச்சரியமாக இருக்கும்

ஆச்சரியமாக இருக்கும்

பாட் கம்மின்ஸ் கூறுகையில், "அவர் செய்தியாளர்களிடம் தான் எந்த வம்பும் செய்ய மாட்டேன் என கூறியதாக தெரிகிறது. அவர் அப்படி செய்யாமல் இருந்தால் எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கும்" என கூறியுள்ளார். கோலியால் அமைதியாக இருக்க முடியாது என அடித்துக் கூறுகிறார் கம்மின்ஸ்.

சரிவில் ஆஸ்திரேலியா

சரிவில் ஆஸ்திரேலியா

எனினும், ஆஸ்திரேலிய அணி இப்போது வம்புக்கோ, உரசல்களுக்கோ இடம் அளிக்கும் நிலையில் இல்லை. அவர்கள் கடும் தோல்விப் பாதையில் இருக்கிறார்கள். எனவே, அவர்களாக பிரச்சனைகளை ஆரம்பிப்பார்கள் என நினைக்க முடியாது. பந்து சேத விவகாரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடுமையான பின்விளைவுகளை சந்தித்துவிட்டது.

இனி அனல் பறக்காது

இனி அனல் பறக்காது

பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா போட்டி போட்டு ஆடும். ஆனால், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கடந்த சில ஆண்டுகள் முன்பு இருந்தது போல கடும் அனல் பறக்கும் வகையில் அது இருக்காது என குறிப்பிட்டார்.

கடந்த கால ஆஸ்திரேலிய சர்ச்சைகள்

கடந்த கால ஆஸ்திரேலிய சர்ச்சைகள்

பாட் கம்மின்ஸ் மறைமுகமாக குறிப்பிடும் சம்பவம், கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியின் போது ரிவ்யூ கேட்பதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் அறையை உதவிக்காக பார்த்தார். இதற்கு கோலி கடும் எதிர்வினை ஆற்றினார். இது மட்டுமின்றி, இதற்கு முன்பும், இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகள் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. ஹர்பஜன் - சைமண்ட்ஸ் சர்ச்சை தான் இதில் மிகப் பெரியது. கோலியும் ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால், இந்த முறை இரண்டு அணிகளுமே சர்ச்சைகள் வராமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கும் என தெரிகிறது. ஆனால், கோலியால் களத்தில் அமைதியாக இருக்க முடியுமா?

Story first published: Tuesday, November 20, 2018, 11:47 [IST]
Other articles published on Nov 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+