ஆக்லாந்து: நியூசிலாந்து அதிரடி வீரர் பிரென்டன் மெக்கல்லத்திற்கு பந்துபோட வந்து வழுக்கி விழுந்த ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கி அதிரடி காண்பித்தது. அந்த அணியின் கேப்டனும் அதிரடி வீரருமான மெக்கல்லம் 50 ரன்களை குவித்திருந்தபோது, வேகப்பந்து வீச்சாளர், பாட் கம்மின்ஸ் பந்து வீசினார்.

7.3 வது பந்தை அவர் வீச ஓடி வந்தபோது, கிரீசில் கால் வழுக்கியபடி விழுந்தார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பதறிப்போனர். ஆனால் அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார், பாட் கம்மின்ஸ்.
இதைத் தொடர்ந்து 7.3வது பந்தை வீசினார். அது விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. அதற்கு அடுத்த பந்தை மெக்கல்லம் அடித்து ஆட, அது மிட்-ஆப் பகுதியில் நின்ற ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆகி விக்கெட்டை பறித்தது.