Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாக்பூர் போட்டி:இந்தியாவுக்கு அதிர்ச்சி.. ஆஸி. வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ரோகித் டக் அவுட்

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் போட்டியில் முதல் ஓவரிலேயே இந்திய அணி ரோகித்தை இழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டி20 தொடரை வென்றது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

Pat Cummins took Rohit Sharma wicket for a duck

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என இந்திய முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி, நாக்பூரில் இன்று தொடங்கியுள்ளது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு செய்தது.

இந்திய அணியில் முதல் போட்டியில் இடம்பெற்ற வீரர்களே இம்முறையும் களத்தில் உள்ளனர். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களம் இறங்கினர்.

ரசிகர்களின் பலத்த கரவொலிகளுக்கு இடையே இருவரும் மைதானத்துக்குள் வந்தனர். முதல் ஓவரை கம்மின்ஸ் வீசினர். முதல் பந்துகளில் ரோகித் திணறினார். 5வது பந்தை அடித்து ஆட அவர் முயற்சிக்க... அந்த பந்து அழகாக சம்பாவின் கையில் கேட்சாக விழுந்தது.

முதல் ஓவரின் 5வது பந்தில் நட்சத்திர வீரர் ரோகித் டக் அவுட்டாக... தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரோகித்தின் விக்கெட்டை எதிர்பாராத ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அதிர்ச்சியானது. ரோகித்தை தொடர்ந்து... தவானுடன் கேப்டன் கோலி கைகோர்த்து விளையாடி வருகிறார்.

Story first published: Tuesday, March 5, 2019, 17:32 [IST]
Other articles published on Mar 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+