Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

18 போட்டிகளில் 16ல் தோல்வி.. பரிதாப ஆஸ்திரேலியா... மீண்டு வருமா?

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 5-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் தோல்வியை தழுவியது.

முதலில் நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் வெற்றிக்கு அருகாமையில் வந்த ஆஸ்திரேலியா அணி பரிதாபமாக தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் தனியொருவனாக போராடி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினார்.

பட்லர் அபார சதம்

பட்லர் அபார சதம்

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் பட்லர் சிறப்பாக ஆடி 110 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 6ஆவது சதம் ஆகும்.

2வது பெரிய தோல்வி

2வது பெரிய தோல்வி

சமீப காலங்களில் ஆஸ்திரேலியா அணி பெறும் இரண்டாவது வொயிட் வாஷ் தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக இதுபோன்றதொரு தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா.

 இங்கிலாந்தின் 2வது ஒயிட் வாஷ்

இங்கிலாந்தின் 2வது ஒயிட் வாஷ்

இங்கிலாந்து அணி எதிரணியை இது போல வொயிட் வாஷ் செய்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் ஜிம்பாப்வே அணியை 2001 ஆம் ஆண்டு வொயிட் வாஷ் செய்துள்ளது.

18ல் 16 தோல்வி

18ல் 16 தோல்வி

இந்த தோல்வியுடன் சேர்த்து ஆஸ்திரேலியா அணி கடந்த 18 போட்டிகளில் 16 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது அந்த நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து அடி வாங்குமா

தொடர்ந்து அடி வாங்குமா

ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா என்றாலே எதிரணியினருக்கு தொடை நடுங்கும். அப்படி ஒரு திடகாத்திரமான ஜாம்பவானாக இருந்து வந்தது ஆஸ்திரேலியா. ஆனால் இன்று அடுத்தடுத்து அடி வாங்குகிறது. இதிலிருந்து அந்த அணி மீளுமா அல்லும் மேலும் சில பல அடிகளை வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, June 25, 2018, 17:39 [IST]
Other articles published on Jun 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+