Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் அசத்தல் பந்து வீச்சுக்கு காரணம் என்ன? சிலாகிக்கும் ஜாம்பவான் ஸ்பின்னர்கள்!

சென்னை: அஸ்வின் சிறப்பான முறையில் சுழற்பந்துகளை வீசி எதிரணியினரை சாய்க்கும் காரணங்கள் குறித்து சுழல் நட்சத்திரங்களான எரபள்ளி பிரசன்னா மற்றும் சிவராமகிருஷ்ணன் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒன்றை இழந்தும் மற்றொன்றை வென்றும் உள்ளது. இவ்விரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மிகச்சிறப்பாக பங்காற்றினார்.

17 விக்கெட்டுகள்

17 விக்கெட்டுகள்

2 டெஸ்ட் போட்டிகளின் 4 இன்னிங்சுகளிலுமாக அஸ்வின் 17 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். இலங்கையின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான குமார் சங்ககாராவை நான்கு இன்னிங்சுகளிலும், அஸ்வின் வீழ்த்தி அசத்தினார்.

டி20 போட்டியால் அவதி

டி20 போட்டியால் அவதி

டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தால், தனது இயல்பான பந்து வீச்சை இழந்ததை போல காணப்பட்ட அஸ்வின் தற்போது மீண்டும் ஒரிஜினல் சுழலுக்கு திரும்பியுள்ளார். அவரது பந்து வீச்சை விக்கெட்டை எடுக்கும் நோக்கத்திற்கே அன்றி, ரன்களை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக அவர் பயன்படுத்தவில்லை.

முதிர்ச்சி

முதிர்ச்சி

இதுகுறித்து முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் எரப்பள்ளி பிரசன்னா கூறியதாவது: ஒவ்வொரு முறை பந்தை வீச வரும்போதும், விக்கெட்டை வீழ்த்தும் எண்ணத்தில்தான் அஸ்வின் வருகிறார். இரு டெஸ்ட் போட்டிகளிலுமே அஸ்வினிடம் இந்த குணாதிசியத்தை பார்க்க முடிந்தது. அஸ்வின் முதிர்ச்சியடைந்துள்ளார் என்றார்.

கும்ப்ளேக்கு பின்

கும்ப்ளேக்கு பின்

சிவராமகிருஷ்ணன் கூறியதாவது: அனில் கும்ப்ளேக்கு பிறகு, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்திய ஸ்பின்னர் அஸ்வின் ஆகும். பேட்ஸ்மேன் யோசிப்பதை கணித்து அதற்கு மாற்றாக பந்து வீச வேண்டும். ஒவ்வொரு பந்துக்கும் ஒரு யோசனை அவசியம்.

ரிதம் உள்ளது

ரிதம் உள்ளது

ஸ்பின் பந்து வீச்சு என்பது முழுக்க ரிதம் சார்ந்தது. பந்தை கையில் இருந்து விடுவிக்கும்போதே நல்ல ஃபீலிங்கை உணர்ந்தால், அன்றைய நாள் அந்த பவுலருக்கு சாதகமாக இருக்கும். அஸ்வின் பல்வேறு புது முயற்சிகளை செய்து வந்தார். அவரது பொறுமைக்கு தற்போது பலன் கிடைத்து்ள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Story first published: Wednesday, August 26, 2015, 13:20 [IST]
Other articles published on Aug 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+