Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பா முதுகில் மகள்.. வியர்க்க விறுவிறுக்க யோகா.. அந்தப் பக்கம் டென்னிஸ்.. கலக்கறீங்க டாடீஸ்!

லண்டன்: விளையாடத்தான் வழி இல்லாமல் போச்சு.. வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையும் வந்தாச்சு. ஆனாலும் நம்ம விளையாட்டு வீரர்கள் விதம் விதமாக யோசித்து நேரத்தை அழகாக கடத்திக் கொண்டுள்ளனர்.

உண்மையிலேயே இதைப் பாராட்டியாக வேண்டும். வெறுமேனே உட்காராமல் குடும்பத்தோடு பேசுவது, விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, சமைப்பது என கலக்குகின்றனர் விளையாட்டு வீரர், வீராங்கனைகள்.

அந்த வகையில் சில வீரர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை இன்னொரு தொகுப்பாக இதில் பார்க்கலாம். இதில் 2 குடும்பங்களை கையில் எடுக்கிறோம். அவங்க என்னென்ன சேட்டை பண்றாங்கன்னு பார்க்கலாம்.

யோகா பண்றாங்களாம்

இது அப்பா மகளின் கதை.. அதாவது யோகா செய்யும் கதை. ஹீரோ பால் காலிங்வுட்.. நம்ம இங்கிலாந்துக்காரர், கிரிக்கெட் வீரர். ஹீரோயின் கிடையாது இந்தக் கதையில். மாறாக அப்பாவின் செல்ல இளவரசிதான் இதில் அந்த ரோலில் வருகிறார் . அப்பாவும் மகளுமாக சேர்ந்து யோகாசனம் செய்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது. ரொம்ப அற்புதமாகவே இருக்கிறது இந்த யோகா.

காலை நேர யோகா நல்லது

காலை நேர யோகா நல்லது

காலிங்வுட் கூறுகையில் காலை நேர யோகா இது. உங்களுக்கு பிரியமானவர்களுடன் சேர்ந்து இதை செய்யுங்கள். அமைதியான முறையில் நேரத்தை செலழிடுங்கள். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் தனித்து இருந்து வருகிறோம். இந்த நேரத்தில் நிறைய பேச, சிரிக்க நமக்கு நேரம் கிடைத்திருக்கிறது. அருமையான நாளாக இது அமையட்டும் என்று கூறியுள்ளார்.

சோயிப் அக்தரும் அவரின் மகளும்

இது அடுத்த குடும்பத்தின் கதை. இதுவும் கிரிக்கெட் கதைதான். முன்னாள் வீரர் வேகப் புயல் சோயிப் அக்தரின் வீடு இது. அவரும் அவரது பிள்ளைகளும் டென்னிஸ் விளையாடி பொழுது போக்குகின்றனர். இந்த வீடியோவில் சோயிப் அக்தர் தனது மகளுடன் டென்னிஸ் ஆடுவது போல உள்ளது. சும்மா சொல்லக் கூடாது, அக்தருக்குப் போட்டியாக படு வேகப் புயலாக இருக்கிறார் மகள்.

தனிமையில் இனிமை காண்போம்

தனிமையில் இனிமை காண்போம்

இதுகுறித்து சோயிப் அக்தர் போட்டுள்ள பதிவில், குழந்தைகள், உற்றார் உறவினர்களுடன் வீட்டோடு இருக்கிறேன். எனது மகன் அடிக்கடி போய் கையைக் கழுவிட்டு வந்து சொல்லிட்டுப் போறான்.. உங்களுக்கு கேக்குதா அவனோட வாய்ஸ்.. என்ன சொல்றான்னு புரியுதா என்று கேட்டுள்ளார். நாம் காதை உற்று கேட்டோம். புரியலை.. ஏன்னா அவன் பேசுவது உருதாச்சே.. நமக்கு எப்படி புரியம்!

நாய் மூலமாக பரவாது

இப்படியாக போய்க் கொண்டுள்ள கதையில் சூரியகுமார் யாதவ் நுழைகிறார். நாய்கள் மூலமாக கொரோனா பரவுவதாக கிளம்பிய வதந்தியால் பலரும் நாய்கள் குறித்து அலர்ஜியுடன் பார்க்க நேரிடுகிறது. அது தவறு என்று ஒரு போஸ்ட் போட்டுள்ளார் சூர்யகுமார் யாதவ். நாய்கள் மூலமாக கொரோனா பரவாது. எனவே நாய்களை தவிர்க்காதீர்கள், அவற்றை கைவிடாதீர்கள் என போஸ்ட் போட்டுள்ளார் அவர்.

Story first published: Sunday, March 22, 2020, 16:59 [IST]
Other articles published on Mar 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+