Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி!!

டெல்லி : பிரபல WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் பால் ஹேமன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ட்விட்டர் தளத்தில் தன் வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக ராயல்டி கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

அதுவும் தோனியை பற்றி ஐசிசி தெரிவித்த கருத்துக்களுக்காக தான் பால் ஹேமன் ராயல்டி கேட்டுள்ளார் என்பதால் இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் அவரை கலாய்த்து வருகின்றனர். என்ன தான் நடந்தது?

ஐசிசி பதிவு என்ன?

ஐசிசி-யின் கிரிக்கெட் வேர்ல்ட் கப் என்ற ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலிய தொடரில் இரண்டு போட்டிகளை தோனி அடுத்தடுத்து கடைசி வரை நின்று வெற்றி தேடிக் கொடுத்ததை குறிப்பிட்டு, "Eat, Sleep, Finish Games, Repeat" (சாப்பிடு, தூங்கு, போட்டியை முடி, மீண்டும் இதை செய்) என ஒரு பதிவை போட்டு இருந்தது.

உல்டா அடித்த ஐசிசி

உல்டா அடித்த ஐசிசி

இந்த பதிவில் வந்த ஆங்கிலத் தொடர் வாசகம் பிரபல WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் பால் ஹேமன் பல ஆண்டுகளாக கூறி வரும், "Eat, Sleep, Conquer, Repeat" என்ற வாசகத்தின் உல்டா வடிவம்.

ராயல்டி கேட்ட பால் ஹேமன்

இதை கண்டுபிடித்த பால் ஹேமன், தன் கெத்தை உலகுக்கு காட்ட தனக்கு ராயல்டி கொடுக்குமாறு ஐசிசி-யிடம் கேட்டுள்ளார் பால் ஹேமன். ராயல்டி கேட்கும் பதிவில், என் வார்த்தைகளை பயன்படுத்தி தோனியை புகழ்ந்துள்ளீர்கள். அதற்கான ராயல்டியை பணமாகவோ, செக் ஆகவோ, பங்குகளாகவோ, கிரிப்டோகரன்ஸி ஆகவோ கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இந்திய ரசிகர்கள் சவால்

இந்திய ரசிகர்கள் சவால்

இதை கண்ட இந்திய ரசிகர்கள் சிலர் "பிராக் லெஸ்னரை, தோனி கூட சண்டை போட ஒத்தைக்கு ஒத்தை வர சொல்லு" என சவால் விட்டு அதகளம் செய்து வருகின்றனர். சிலர், இந்திய அணியில் ஒல்லியாக இருக்கும் சாஹல் - பிராக் லெஸ்னர் இருவரும் மோத வேண்டும் என கூறி கலாய்த்து வருகின்றனர்.

Story first published: Saturday, January 19, 2019, 18:37 [IST]
Other articles published on Jan 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+