சிட்னி:ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு சுத்தமாக நாகரீகமே கிடையாது என மத்திய விவசாயத்துறை அமைச்சரும்,இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்குநடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது சரத் பவார் வெற்றிக் கோப்பையை வழங்கமேடையில் காத்திருந்தார். அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், சரத்பவாரை விரலால் சுண்டிக் கூப்பிட்டு தன்னிடம் வந்து கோப்பையைத் தருமாறுகூறினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கோப்பையுடன் புகைப்படத்திற்குபோஸ் கொடுக்கத் தயாராகினர். அப்போது இன்னொரு வீரரான மார்ட்டின், சரத்பவாரை தோள்பட்டையைப் பிடித்து தள்ளினார்.
இதை பெரிய சர்ச்சையாக்க விரும்பவில்லை என்று சரத் பவார் கூறியிருந்தார்.ஆனால், இப்போது தான் முதன்முதலாக தனது கோபத்தைக் காட்டியுள்ளார் பவார்.
ஆஸ்திரிேயலாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ளபேட்டியில்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான உறவை கெடுக்க விரும்பாததால் தான்நான் அமைதி காத்தேன். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களின் செயலை விமர்சித்துத்தான் ஆக வேண்டும்.
சுத்த நாகரீகமில்லாதவர்களாகத் தான் அவர்கள் உள்ளனர். இது நல்லதுக்கல்ல.
அன்று நான் இருந்த மேடைக்கு கோப்பையைப் பெற அணியின் கேப்டன் மட்டும்தான் வந்திருக்க வேண்டும். ஆனால், எல்லா வீரர்களும் நாகரீகமில்லாமல்மேடையில் ஏறினர். அதன் பின்னர் தான் அந்த சம்பவம் (பவாரை பிடித்துதள்ளிவிட்டது) நடந்தது.
தவறு செய்தவர்கள் இதற்காக மன்னிப்பு கேட்டால், அந்த விவகாரத்துக்கு நாம்முற்றுப் புள்ளி வைத்துவிடலாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்புகேட்டால் அது இந்திய மக்களுக்கு மரியாதை தரும் செயலாக இருக்கும் என்றார்.
ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரியான ஜேம்ஸ்சூத்தர்லாந்த் கூறுகையில், கலாச்சாரங்கள் மாறுபட்ட இரு பிரிவினர் சந்திக்கும்போதுநடந்துவிட்ட சம்பவம் இது. இந்தியர்களை அவமதிக்க இவ்வாறு எங்கள் வீரர்கள்நடந்து கொள்ளவில்லை.
இந்த சம்பவத்துக்கா நானும் பாண்டிங்கும் வருத்தம் தெரிவித்துவிட்டோம் என்றார்.
ஆனால், அவர்கள் வருத்தம் தெரிவித்ததாக இதுவரை நான் கேள்விப்படவில்லை எனசரத் பவார் பதிலடி தந்துள்ளார்.